தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-4110

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார் எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனத்தைக் குறித்து அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் ஒரு மலையின் மீது ஏறினார்கள். (மலையில் திடீரென) ஹாரூன் (அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள். பனூஇஸ்ரவேலர்கள், மூஸாவே! ஹாரூன் (அலை) அவர்கள், உம்மைவிட எங்களை அதிகம் நேசிப்பவராக இருந்தார். உம்மைவிட எங்களிடம் மென்மையாக நடப்பவராக இருந்தார். எனவே நீர்தான் அவரைக் கொன்றுவிட்டாய்! என்று கூறி இதன்மூலம் மூஸா (அலை) அவர்களுக்கு தொல்லை கொடுத்தனர்.

எனவே ஹாரூன் (அலை) அவர்களின் உடலை பனூஇஸ்ரவேலர்கள் உள்ள இடத்துக்கு உடலை கொண்டுவருமாறு அல்லாஹ், வானவர்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் உடலைக் கொண்டுவந்து (அவரின் மரணம் குறித்து வானவர்கள் கூறியதால்) அவரின் மரணத்தைப் பற்றி  பனூஇஸ்ரவேலர்கள் அறிந்துக் கொண்டனர். (பிறகு) அவரை அடக்கம் செய்தனர்.

ஹாரூன் (அலை) அவர்களின் கப்ர் உள்ள இடம் (ரகம் எனும்) மஞ்சள் பாறு-எகிப்திய பிணந்தின்னிக் கழுகுக்கு மட்டுமே தெரியும். அல்லாஹ் அதை செவிடாகவும், ஊமையாகவும் ஆக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது சரியான அறிவிப்பாளர்தொடராகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.

(ஹாகிம்: 4110)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَمْشَاذٍ، ثنا مُحَمَّدُ بْنُ شَاذَانَ الْجَوْهَرِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنِ الْحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ،

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا} [الأحزاب: 69] قَالَ: ” صَعِدَ مُوسَى وَهَارُونُ الْجَبَلَ فَمَاتَ هَارُونُ فَقَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى: أَنْتَ قَتَلْتَهُ كَانَ أَشَدَّ حُبًّا لَنَا مِنْكَ وَأَلْيَنَ لَنَا مِنْكَ فَآذَوْهُ فِي ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ فَحَمَلَتْهُ فَمَرُّوا بِهِ عَلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ حَتَّى عَلِمُوا بِمَوْتِهِ فَدَفَنُوهُ وَلَمْ يَعْرِفْ قَبْرَهُ إِلَّا الرَّخَمُ وَإِنَّ اللَّهَ جَعَلَهُ أَصَمَّ أَبْكَمَ

«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4110.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4041.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . அலீ பின் ஹம்ஷாத்

3 . முஹம்மத் பின் ஷாதான்

4 . ஸயீத் பின் ஸுலைமான்

5 . அப்பாத் பின் அவ்வாம்

6 . ஸுஃப்யான் பின் ஹுஸைன்

7 . ஹகம் பின் உதைபா

8 . ஸயீத் பின் ஜுபைர்

9 . இப்னு அப்பாஸ் (ரலி)

10 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


  • இந்தச் செய்தியை சிலர் சரியானது என்று கூறியிருந்தாலும் வேறுசிலர் இது (நமக்கு முன் வேதம்வழங்கப்பட்டோரான) வேதமுடையோரிடமிருந்து பெறப்பட்ட தகவல் என்று கூறியுள்ளனர்…

  • பனூஇஸ்ரவேலர்கள், மூஸா (அலை) அவர்கள் மீது விபச்சார குற்றச்சாட்டை வைப்பதற்கு ஒரு பெண்ணை தூண்டியபோது அவள் மூஸா (அலை) அவர்கள் குற்றமற்றவர் என்று கூறினாள் என்றும் ஒரு செய்தி உள்ளது. இந்த நிகழ்வையும் சிலர் இந்த வசனத்துக்கு விளக்கமாக கூறியுள்ளனர்.

(தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-17076)

மூஸா (அலை) அவர்களுக்கு அவர்களின் சமுதாயத்தால் பல தொல்லைகள் ஏற்பட்டன. எனவே இந்த நிகழ்வு அனைத்தையும் இந்த வசனம் குறிக்கிறது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

என்றாலும் புகாரி-3404 இல் வரும் செய்தியே சரியானதாகும்.


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் மனீஃ —> அப்பாத் பின் அவ்வாம் —> ஸுஃப்யான் பின் ஹுஸைன் —> ஹகம் பின் உதைபா —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> அலீ பின் அபூதாலிப் (ரலி)
     

பார்க்க: அல்மதாலிபுல் ஆலியா-3455, 3685.


المطالب العالية بزوائد المسانيد الثمانية (14/ 257)
3455 – وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ: حدثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، ثنا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الْحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابن عباس (رَضِيَ الله عَنْهما) عن علي رضي الله (عنه) فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ} . قَالَ: صَعِدَ مُوسَى وَهَارُونُ الْجَبَلَ، فَمَاتَ هَارُونُ، فَقَالَتْ بَنُو إِسْرَائِيلَ: (أَنْتَ) قَتَلْتَهُ، وَكَانَ أَشَدَّ حُبًّا لَنَا مِنْكَ، وَأَلْيَنَ لَنَا مِنْكَ، فَآذَوْهُ بِذَلِكَ، فأمر الله تعالى الْمَلَائِكَةَ فَحَمَلُوهُ حَتَّى مَرُّوا عَلَى بَنِي إِسْرَائِيلَ، فتكلمت الملائكة (عليهم السلام) بِمَوْتِهِ، حَتَّى عَرَفَتْ بَنُو إِسْرَائِيلَ أَنَّهُ قَدْ مَاتَ، فَانْطَلَقُوا بِهِ فَدَفَنُوهُ، فَلَمْ يَطَّلِعْ عَلَى قَبْرِهِ أَحَدٌ مِنْ خلق الله تعالى إِلَّا الرَّخَمُ، فجعله الله عز وجل أَصَمَّ أَبْكَمَ. هَذَا إِسْنَادٌ صَحِيحٌ.


  • 2 . அலீ பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> அப்பாத் பின் அவ்வாம் —> ஸுஃப்யான் பின் ஹபீப் —> ஹகம் பின் உதைபா —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> அலீ பின் அபூதாலிப் (ரலி) 

பார்க்க: தஃப்ஸீருத் தபரீ-26349 (19/194), மஹாமிலீ-176,


  • தஃப்ஸீருத் தபரீ-26349 (19/194).

تفسير الطبري = جامع البيان ط هجر (19/ 194)
حَدَّثَنِي عَلِيُّ بْنُ مُسْلِمٍ الطُّوسِيُّ، قَالَ: ثنا عَبَّادٌ، قَالَ: ثنا سُفْيَانُ بْنُ حَبِيبٍ، عَنِ الْحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، فِي قَوْلِ اللَّهِ: {لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى} [الأحزاب: 69] . . . الْآيَةَ، قَالَ: ” صَعِدَ مُوسَى وَهَارُونُ الْجَبَلَ، فَمَاتَ هَارُونُ، فَقَالَتْ بَنُو إِسْرَائِيلَ: أَنْتَ قَتَلْتَهُ، وَكَانَ أَشَدَّ حُبًّا لَنَا مِنْكَ، وَأَلْيَنَ لَنَا مِنْكَ، فَآذَوهُ بِذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ فَحَمَلَتْهُ حَتَّى مُرُّوا بِهِ عَلَى بَنِي إِسْرَائِيلَ، وَتَكَلَّمَتِ الْمَلَائِكَةُ بِمَوْتِهِ، حَتَّى عَرَفَ بَنُو إِسْرَائِيلَ أَنَّهُ قَدْ مَاتَ، فَبَرَّأَهُ اللَّهُ مِنْ ذَلِكَ فَانْطَلَقُوا بِهِ فَدَفَنُوهُ، فَلَمْ يَطْلُعْ عَلَى قَبْرِهِ أَحَدٌ مِنْ خَلَقِ اللَّهِ إِلَّا الرَّخَمَ، فَجَعَلَهُ اللَّهُ أَصَمَّ أَبْكَمَ


  • மஹாமிலீ-176.

أمالي المحاملي رواية ابن يحيى البيع (ص: 195)
176 – ثنا الْحُسَيْنُ ثنا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، أَنْبَأَ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ , عَنِ الْحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69] قَالَ: ” صَعِدَ مُوسَى، وَهَارُونُ الْجَبَلَ , فَمَاتَ هَارُونُ , وَقَالَتْ بَنُو إِسْرَائِيلَ: أَنْتَ قَتَلْتَهُ كَانَ أَشَدَّ حُبًّا لَنَا مِنْكَ وَأَلْيَنَ فَآذُوهُ بِذَلِكَ , فَأَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ , فَحَمَلَتْهُ حَتَّى مَرُّوا بِهِ عَلَى بَنِي إِسْرَائِيلَ , وَتَكَلَّمَتِ الْمَلَائِكَةُ بِمَوْتِهِ حَتَّى عَرَفَتْ بَنُو إِسْرَائِيلَ أَنَّهُ قَدْ مَاتَ , فَبَرَّأَهُ اللَّهُ مِنْ ذَلِكَ , فَانْطَلَقُوا بِهِ , وَدَفَنُوهُ , فَلَمْ يَطَّلِعْ عَلَى قَبْرِهِ أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ إِلَّا الرَّخَمُ , فَجَعَلَهُ اللَّهُ أَصَمَّ أَبْكَمَ “


  • 3 . ஸயீத் பின் ஸுலைமான் —> அப்பாத் பின் அவ்வாம் —> ஸுஃப்யான் பின் ஹுஸைன் —> ஹகம் பின் உதைபா —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> அலீ பின் அபூதாலிப் (ரலி) 

பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-67, தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-17802, ஹாகிம்-4110,


  • தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-17802.

تفسير ابن أبي حاتم – محققا (10/ 3158)
17802 – حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ حَدَّثَنَا الْحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ، عَنْهُمْ فِي قَوْلِهِ: فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا قَالَ: صَعِدَ مُوسَى وَهَارُونُ الْجَبَلَ فَمَاتَ هَارُونُ عليه السلام فقال بنوا إِسْرَائِيلَ لِمُوسَى عَلَيْهِ السَّلامُ: أَنْتَ قَتَلْتَهُ، كَانَ أَلْيَنَ لَنَا مِنْكَ وَأَشَدَّ حَيَاءً فَآذَوْهُ مِنْ ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الْمَلائِكَةَ فَحَمَلَتْهُ فَمَرُّوا بِهِ عَلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ فَتَكَلَّمَتْ بِمَوْتِهِ فَمَا عَرَفَ مَوْضِعَ قَبْرِهُ إِلا الرَّخَمُ وَإِنَّ اللَّهَ جَعَلَهُ أَصَمَّ أَبْكَمَ


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-17076.

تفسير ابن أبي حاتم (9/ 3005):
17076 – حَدَّثَنَا أَبُو سَعِيدِ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ، ثنا يَحْيَى بْنُ غَسَّانَ بْنِ عِيسَى الرَّمْلِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ مُوسَى يَقُولُ لِبَنِي إِسْرَائِيلَ إِنَّ اللَّهَ عز وجل يَأْمُرُكُمْ بِكَذَا وَكَذَا حَتَّى دَخَلَ عَلَيْكُمْ فِي أَمْوَالِكُمْ وَإِنَّ مُوسَى يَزْعُمُ أَنَّ رَبَّهُ أَمَرَهُ فِيمَنْ زَنَى أَنْ يَرْجُمَهُ فَتَعَالُوا نَجْعَلُ لِبَغِيٍّ مِنْ بَنِي إِسْرَائِيلَ شَيْئًا، فَإِذَا قَالَ مُوسَى: إِنَّ رَبَّهُ أَمَرَ فِيمَنْ زَنَى أَنْ يُرْجَمَ فَنَقُولُ: إِنَّ مُوسَى قَدْ فَعَلَ ذَلِكَ بِهَا، قَالَ: فَاجْتَمَعُوا وَجَاءُوا بِالْبَغِيِّ فَحَبَسُوهَا وَقَالَ مُوسَى: إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ بِكَذَا وَكَذَا فِيمَنْ سَرَقَ أَنْ تُقْطَعَ يَدُهُ، قَالُوا: وَإِنْ كُنْتَ أَنْتَ؟
قَالَ: وَإِنْ كُنْتُ أَنَا، قَالُوا مَا عَلَى الزَّانِي إِذَا زَنَى؟ قَالَ: الرَّجْمُ، قَالُوا: وَإِنْ كُنْتَ أَنْتَ؟ قَالَ: وَإِنْ كُنْتُ أَنَا، قَالُوا: فَإِنَّكَ قَدْ زَنَيْتَ قَالَ: أَنَا؟ وَجَزِعَ مِنْ ذَلِكَ

قَالَ: فَأَرْسَلُوا إِلَى الْمَرْأَةِ فَلَمَّا أَنْ جَاءَتْ عَظَّمَ عَلَيْهَا مُوسَى بِاللَّهِ وَسَأَلَهَا بِالَّذِي فَلَقَ الْبَحْرَ لِبَنِي إِسْرَائِيلَ، وَأَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى إِلا صَدَقْتِ، فَقَالَتْ: أَمَا إِذَا حَلَّفْتَنِي فَإِنِّي أَشْهَدُ أَنَّكَ بَرِيءٌ وَأَنَّكَ رَسُولُ اللَّهِ، وَقَالَتْ: أَرْسَلُوا إِلَيَّ فَأَعْطَوْنِي حُكْمِي عَلَى أَنْ أَرْمِيَكَ بِنَفْسِي، قَالَ: فَخَرَّ مُوسَى لِلَّهِ سَاجِدًا يَبْكِي، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ مَا يُبْكِيكَ؟ قَدْ أَمَرْتُ الأَرْضَ أَنْ تُطِيعَكَ فَأْمُرْهَا بِمَا شِئْتَ.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3404,


 

3 comments on Hakim-4110

  1. மு

    முஃமினான ஆண்கள், முஃமினான பெண்களுக்காக யார் பாவ மன்னிப்புத் தேடுகிறாரோ, ஒவ்வொரு முஃமினான ஆண், பெண்ணிற்குப் பகரமாக அல்லாஹுத்தஆலா அவருக்கு ஒரு நன்மை எழுதுகிறான் என்று நபி ﷺ அவர்கள் கூறத்தாம் கேட்டதாக ஹஜ்ரத் உபாதத்துப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபரானி, (மஜ்மஉஸ்ஸவாயித்)

    இதன் தரம் ?

  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இது முஸ்னத் ஷாமிய்யீன்-2155 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    مسند الشاميين للطبراني (3/ 234)
    2155 – حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي الطَّاهِرِ بْنِ السَّرْحِ، ثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ أَبُو صَالِحٍ الْحَرَّانِيُّ، ثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ بَكْرِ بْنِ خُنَيْسٍ، عَنْ عُتْبَةَ بْنِ حُمَيْدٍ، عَنْ عِيسَى بْنِ سِنَانٍ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اسْتَغْفَرَ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ حَسَنَةً»

    இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பக்ர் பின் குனைஸ் என்பவரை அதிகமானோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
    மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3123.

    முஃமின்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதால் இன்ன சிறப்பு உள்ளது என்ற செய்திகள் பலவீனமானவையே.

    ஆனால் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்கு சில குர்ஆன் வசனங்கள் உள்ளன.

    பார்க்க: (அல்குர்ஆன்: 14:41, 47:19, 59:10, 71:28)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.