தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-4866

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஸுலைமான் பின் அபான் என்பவர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குப் புறப்பட்டபோது, ஸஃத் பின் கைஸமா (ரலி) அவர்களும், அவரது தந்தை கைஸமா (ரலி) அவர்களும் (போரில்) கலந்துகொள்ள விரும்பினர். இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் இருவரில் ஒருவர் மட்டும் போரில் கலந்துகொள்ளலாம்; எனவே இருவரும் சீட்டுக் குலுக்கி பாருங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

அப்போது கைஸமா பின் ஹாரிஸ் (ரலி) தம் மகன் ஸஃத் (ரலி) அவர்களிடம், “நம்மில் ஒருவர் தங்கியிருக்க வேண்டியது அவசியம். எனவே, நீர் உம் குடும்பத்தாருடன் தங்கிவிடும்” என்று கூறினார். அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இது சொர்க்கம் (ஜன்னத்) அல்லாத வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தால், அதைத் தங்களுக்கு விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால், இந்தப் போரில் நான் ஷஹீதாவதை எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்.

பின்னர் அவர்கள் சீட்டுக் குலுக்கி பார்த்தனர். அதில் ஸஃத் (ரலி) அவர்களின் பெயர் வந்தது. எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றார். அங்கு, அம்ர் பின் அப்து வத் என்பவனால் ஸஃத் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்.

(ஹாகிம்: 4866)

أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الْحَلِيمِيُّ بِمَرْوَ، أَنَا أَبُو الْمُوَجِّهِ، أَنَا عَبْدَانُ، أَنَا عَبْدُ اللَّهِ، أَنَا رَجُلٌ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ أَبَانَ حَدَّثَهُ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ أَرَادَ سَعْدَ بْنَ خَيْثَمَةَ وَأَبُوهُ جَمِيعًا الْخُرُوجَ مَعَهُ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا فَاسْتَهَمَا» ، فَقَالَ خَيْثَمَةُ بْنُ الْحَارِثِ لِابْنِهِ سَعْدٍ: إِنَّهُ لَا بُدَّ لِأَحَدِنَا مِنْ أَنْ يُقِيمَ فَأَقِمْ مَعَ نِسَائِكَ، فَقَالَ سَعْدٌ: لَوْ كَانَ غَيْرُ الْجَنَّةِ لَآثَرْتُكَ بِهِ أَنِّي أَرْجُو الشَّهَادَةَ فِي وَجْهِي هَذَا، فَاسْتَهَمَا فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، فَقَتَلَهُ عَمْرُو بْنُ عَبْدِ وَدٍّ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4866.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4814.




ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவற்றில் அறியப்படாதவர்கள் இடம்பெற்றுள்ளனர்; வேறு சிலவற்றில் நபித்தோழர் கூறப்படாமல் முர்ஸலாக வந்துள்ளன.

இது, இரு நபித்தோழர்கள் பத்ருப் போரில் கலந்துக் கொள்வதற்காக ஆசைப்பட்ட வரலாற்றுத் தகவலாகும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . ஹஸன் பின் முஹம்மத் அல்ஹலீமீ

3 . அபுல்முவஜ்ஜிஹ்-முஹம்மத் பின் அம்ர்

4 . அப்தான் பின் உஸ்மான்

5 . அப்துல்லாஹ் பின் முபாரக்

6 . ஒரு மனிதர்

7 . அம்ர் பின் ஹாரிஸ்

8 . ஸயீத் பின் அபூஹிலால்

9 . ஸுலைமான் பின் அபான்


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அம்ர் பின் ஹாரிஸ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர் ஒரு மனிதர் என்று கூறப்பட்டுள்ளது. இவர் யார் என அறியப்படவில்லை.
  • மேலும் இதில் வரும் ராவீ-18166-ஸுலைமான் பின் அபான் பின் அபூஹுதைர் என்பவர் நபித்தோழரா? அல்லது நபித்தோழரை அடுத்து வந்த தாபிஈயா? என்பது குறித்து வரலாற்றுத் தகவல் இல்லை. எனவே இவரின் நிலை அறியப்படவில்லை.
  • இவர் முர்ஸலாக அறிவிப்பவர் என்றும், இவரிடமிருந்து ஸயீத் பின் அபூஹிலால் (மட்டும்) அறிவித்துள்ளார் என்றும் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் கூறியுள்ளார்.

الثقات لابن حبان – أول كتاب أتباع التابعين
سليمان بن أبان ، يروي المراسيل ، روى عنه : سعيد بن أبي هلال .

(நூல்: அஸ்ஸிகாத்-6/383)


எனவே இந்த அறிவிப்பாளர்தொடரில் அறியப்படாத இருவர் இடம்பெற்றிருப்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் ஸுலைமான் பின் அபான் என்பவர் வழியாக வரும் செய்திகள்:

  • இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    —> ஒரு மனிதர் —> அம்ர் பின் ஹாரிஸ் —> ஸயீத் பின் அபூஹிலால் —> ஸுலைமான் பின் அபான்

பார்க்க: அல்ஜிஹாத்-இப்னுல் முபாரக்-79, ஹாகிம்-4866, மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-3144,


  • அல்ஜிஹாத்-இப்னுல் முபாரக்-79.

الجهاد لابن المبارك (ص: 70)
79 – حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ رَحْمَةَ، قَالَ: سَمِعْتُ ابْنُ المُبَارَكِ، عَنْ رَجُلٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ أَبَانَ حَدَّثَهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ أَرَادَ سَعْدُ بْنُ خَيْثَمَةَ وَأَبُوهُ أَنْ يَخْرُجَا جَمِيعًا , فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَأَمَرَهُمَا أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا , فَاسْتَهَمَا , فَخَرَجَ سَهْمُ سَعْدٍ , فَقَالَ أَبُوهُ: آثِرْنِي بِهَا يَا بُنَيَّ , فَقَالَ: يَا أَبَتِ , إِنَّهَا الْجَنَّةُ , لَوْ كَانَ غَيْرَهَا آثَرْتُكَ بِهِ , فَخَرَجَ سَعْدٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقُتِلَ يَوْمَ بَدْرٍ , ثُمَّ قُتِلَ خَيْثَمَةُ مِنَ الْعَامِ الْمُقْبِلِ يَوْمَ أُحُدٍ»


  • மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-3144.

معرفة الصحابة لأبي نعيم (3/ 1253)
3144 – حَدَّثَنَا أَبُو حَامِدِ بْنُ جَبَلَةَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا الْحَسَنُ بْنُ عِيسَى، ثنا ابْنُ الْمُبَارَكِ، ثنا رَجُلٌ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ أَبَانَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ، أَرَادَ سَعْدُ بْنُ خَيْثَمَةَ وَأَبُوهُ جَمِيعًا، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا فَاسْتَهَمَا، فَخَرَجَ سَعْدٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، فَقُتِلَ يَوْمَ بَدْرٍ، ثُمَّ قُتِلَ خَيْثَمَةُ مِنَ الْعَامِ الْمُقْبِلِ يَوْمَ أُحُدٍ


  • அப்துல்லாஹ் பின் வஹ்ப் —> அம்ர் பின் ஹாரிஸ் —> ஸயீத் பின் அபூஹிலால் —> ஸுலைமான் பின் அபான்

பார்க்க: ஸுனன் ஸயீத்-2558,

سنن سعيد بن منصور (2/ 256)
2558 – حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ أَبَانَ بْنِ أَبِي حُدَيْرٍ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ أَرَادَ سَعْدُ بْنُ خَيْثَمَةَ وَأَبُوهُ أَنْ يَخْرُجَا جَمِيعًا، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُمَا أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا، فَاسْتَهَمَا، فَخَرَجَ سَهْمُ سَعْدٍ، فَقَالَ: أَتُؤْثِرُنِي بِهَا يَا بُنَيَّ؟ فَقَالَ سَعْدٌ: إِنَّهَا الْجَنَّةُ، وَلَوْ كَانَ غَيْرَهَا لَآثَرْتُكَ بِهِ، فَخَرَجَ سَعْدٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُتِلَ يَوْمَ بَدْرٍ، ثُمَّ قُتِلَ خَيْثَمَةُ مِنَ الْعَامِ الْمُقْبِلِ يَوْمَ أُحُدٍ


2 . ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-3141,

معرفة الصحابة لأبي نعيم (3/ 1252)
3141 – حَدَّثَنَا فَارُوقٌ، قَالَ: ثنا زِيَادُ بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ، ثنا مُحَمَّدٌ، ثنا مُوسَى، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: ” اسْتَهَمَ يَوْمًا خَيْثَمَةُ، وَابْنُهُ سَعْدٌ أَيُّهُمَا يَخْرُجُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَقَالَ أَبُوهُ: يَا بُنَيَّ آثِرْنِي الْيَوْمَ، فَقَالَ سَعْدٌ: يَا أَبَهْ: لَوْ كَانَ غَيْرُالْجَنَّةِ لَآثَرْتُكَ بِهَا، فَقُتِلَ سَعْدٌ يَوْمَ بَدْرٍ، وَقُتِلَ خَيْثَمَةُ، يَوْمَ أُحُدٍ “

இது முர்ஸலான செய்தியாகும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.