தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-5478

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் ஹுபைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்படுபவராக இருந்தார். அவர்கள் ஒரு முறை, ஒரு படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். பாதைகளை அறிந்து சென்ற அவர், எதிரியை சந்தித்தபோது கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கீழ்க்கண்டவாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்:

ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர், பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை.

பின்னர் ஹபீப் (ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து, தஸ்பீஹ் செய்துவிட்டு இவ்வாறு பிரார்த்தித்தார்:

“இறைவா! எங்கள் இரத்தங்களைப் பாதுகாத்தருள்வாயாக! எங்கள் நற்கூலியை ஷஹீத்களின் நற்கூலியாக ஆக்குவாயாக!”

அவர்கள் இவ்வாறு இருந்த போது, எதிரிப் படைத்தலைவர் ஹுன்பாத் வந்து, ஹபீப் (ரலி) அவர்களின் படைக்குள் நுழைந்தார்.

(ஹாகிம்: 5478)

أَخْبَرَنَا الشَّيْخُ الْإِمَامُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنَا بِشْرُ بْنُ مُوسَى، ثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، ثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو هُبَيْرَةَ، عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ الْفِهْرِيِّ،

وَكَانَ مُجَابَ الدَّعْوَةِ، أَنَّهُ أُمِّرَ عَلَى جَيْشٍ، فَدَرِبَ الدُّرُوبَ، فَلَمَّا أَتَى الْعَدُوَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَا يَجْتَمِعُ مَلَأٌ فَيَدْعُو بَعْضُهُمْ، وَيُؤَمِّنُ الْبَعْضُ، إِلَّا أَجَابَهُمُ اللَّهُ»

ثُمَّ إِنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «اللَّهُمُ احْقِنْ دِمَاءَنَا، وَاجْعَلْ أُجُورَنَا أُجُورَ الشُّهَدَاءِ» فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ نَزَلَ الْهُنْبَاطُ أَمِيرُ الْعَدُوِّ، فَدَخَلَ عَلَى حَبِيبٍ سُرَادِقِهِ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-5478.
Hakim-Shamila-5478.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-5446.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . அபூபக்ர் பின் இஸ்ஹாக் (அஷ்ஷைய்குல் இமாம்)

3 . பிஷ்ர் பின் மூஸா

4 . அப்துல்லாஹ் பின் யஸீத்-அபூஅப்துர்ரஹ்மான் அல்முக்ரீ

5 . இப்னு லஹீஆ

6 . அப்துல்லாஹ் பின் ஹுபைரா-அபூஹுபைரா

7 . ஹபீப் பின் மஸ்லமா அல்ஃபிஹ்ரீ (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ எகிப்தைச் சேர்ந்தவர். இவர் எகிப்தின் நீதிபதியாக இருந்துள்ளார். மேலும் ஹதீஸ்களை அறிவிப்பவராகவும் இருந்துள்ளார்.

1 . இவரைப்பற்றி சிலர் எல்லா நிலையிலும் இவர் பலமானவர் என்றும்,

2 . சிலர் எல்லா நிலையிலும் இவர் பலவீனமானவர் என்றும்,

3 . சிலர், சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் கூறியுள்ளனர்.

(இவரைப் பற்றி விரிவான தகவல் பார்க்க: இப்னு லஹீஆ)

இவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ அறிவிப்பதில் பிரச்சனை இல்லை.


என்றாலும் இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூஹுபைரா அவர்கள் அறிவித்துள்ளார்.

  • ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹிஜ்ரீ 42 இல் மரணித்தார். அபூஹுபைரா அவர்கள், ஹிஜ்ரீ 41 இல் தான் பிறந்தார்.

  1. ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வருடத்தில் மரணித்தார்கள்.

நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)

2 . அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார்.

நூல்: தஹ்தீபுல் கமால்-…


ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா அவர்கள், ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை நேரடியாக கேட்டிருக்க முடியாது.

இந்த அடிப்படையில் இது முன்கதிஃ என்பதால் பலவீனமானதாகும்.


1 . இந்தக் கருத்தில் ஹபீப் பின் மஸ்லமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3536, ஹாகிம்-5478, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தலாஇலுன் நுபுவ்வஹ்-, தாரீகு திமிஷ்க்-இப்னு அஸாகிர்-,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.