தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-599

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)

(ஹாகிம்: 599)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، ثنا مُسَدَّدٌ، وَأَخْبَرَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ، حَدَّثَنِي أَبِي، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي جَزْرَةَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ:

كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا فَقَامَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ يُصَلِّي فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُ الْأَخْبَثَانِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-599.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-554.




  • இந்த செய்தியுடன் காஸிம் பின் முஹம்மத் சம்பந்தப்பட்டவர் என்றாலும் இந்த செய்தியை இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாக வந்திருப்பது தவறு என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.