தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7127

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(ஹாகிம்: 7127)

أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْعَنْبَرِيُّ، ثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْمَاوَرْدِيُّ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، ثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ، ثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحٌ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»

هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ بِهَذِهِ الْأَلْفَاظِ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7127.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7179.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ யஃகூப் பின் வலீத் அல்அஸ்தீ, அல்மதனீ என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு தாஹிர் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் மிக பலவீனமானவர் என்ற கருத்தில் வேறுசில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/447)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: அபூதாவூத்-3852 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.