தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3852

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உணவு சாப்பிட்ட பின் கை கழுவுதல்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உணவு உண்ட) கையில் கொழுப்பு இருக்கும் நிலையில் ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 3852)

بَابٌ فِي غَسْلِ الْيَدِ مِنَ الطَّعَامِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3354.
Abu-Dawood-Shamila-3852.
Abu-Dawood-Alamiah-3354.
Abu-Dawood-JawamiulKalim-3356.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்

3 . ஸுஹைர் பின் முஆவியா

4 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

5 . அபூஸாலிஹ்-தக்வான்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சில அறிவிப்பாளர்தொடர்களை மட்டுமே தவறானது என்று அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் கூறியுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் இந்தத் தவறு இல்லை.

علل الحديث لابن أبي حاتم ط-أخرى (2/ 237)
2202- وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ زَنَيجٌ ، عَن جَرِيرٍ ، عَنِ الأَعمَشِ ، عَن أَبِي صالِحٍ ، عَن أَبِي هُرَيرَةَ ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم ، قالَ : مَن باتَ وَفِي يَدِهِ غَمَرٌ ، فَأَصابَهُ شَيءٌ فَلا يَلُومَنَّ إِلاَّ نَفسَهُ.
قالَ أَبِي : هَذا خَطَأٌ ، فِي أَصلِ جَرِيرٍ : عَن أَبِي صالِحٍ ، عَن أَبِي هُرَيرَةَ ، مَوقُوفًا ، الشَّيءُ الَّذِي أَوقَفَهُ ابنُ حُمَيدٍ فَما يغني , مَعَ أَنَّ يَحيَى بنَ المُغِيرَةِ أَيضًا أَوقَفَهُ.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (5/ 138)
1972- وسُئِل عَن حَديث أَبي صالح، عَن أَبي هُريرة، قال رَسول الله صَلى الله عَليه وسَلم: مَن بات وفي يَدِه غَمَر فأَصابَه شَيء فلا يَلُومَن إلاَّ نَفسَهُ.
فقال: يَرويه سُهيل بن أَبي صالح، واختُلِف عَنه؛
فرَواه حَماد بن سَلَمة، وعَلي بن عاصِم، وزُهَير بن مُعاوية، واختُلِف عَنه؛
عَن سُهَيل، عَن أَبيه، عَن أَبي هُريرة، وقال مُحمد بن الصَّلت، عَن زُهَير، عن سُهَيل، عَن سُمَي، عَن أَبي صالح، عَن أَبي هُريرة.
قاله يَحيَى بن مُعَلَّى بن مَنصور: عَن مُحمد بن الصَّلتِ.

ورَواه أَبو هَمام الدَّلاَّل، عَن الثَّوري، وعَن إبراهيم بن طَهمان، عَن سُهَيل، عَن الأَعمش، عَن أَبي صالح، عَن أَبي هُريرة، وقال قائِلٌ: عَن أَبي هَمام، عَن الثَّوري، عَن الأَعمش، عَن سُهَيل، عَن أَبيه، عَن أَبي هُريرة، ووَهِم في هَذا القَول.

(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-2202, அல்இலலுல் வாரிதா-1972)


இந்தச் செய்தி ஸுஹ்ரீ அவர்கள் வழியாக பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவைகளில் ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழர் விடப்பட்டு முர்ஸலாக வரும் செய்தியே சரியானது என்று அப்துல்லாஹ் பின் முஹம்மத்-ஹஸன் தம்ஃபூ என்ற அறிஞர் கூறியுள்ளார். மேலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், ஸுஹைல் பின் அபூஸாலிஹ் வழியாக வரும் செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளதாகவும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இதை சரியான செய்தி என்று கூறியிருப்பது தவறு என்றும் குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தி முர்ஸல் என்பதால் பலவீனமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: மர்விய்யாதுல் இமாம் அஸ்ஸுஹ்ரீ-810-820)

என்றாலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் ஜரீர் வழியாக வரும் செய்திகளைத் தான் விமர்சித்துள்ளார். ஜரீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் இந்தச் செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். வேறு சிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். இந்த வகை அறிவிப்பாளர்தொடர்களில் நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பதே பலமானது என்று கூறியுள்ளார்.

எனவே ஸுஹைல் பின் அபூஸாலிஹ் வழியாக வரும் மேற்கண்ட செய்தியில் விமர்சனம் இல்லை. ஸுஹைல் அவர்களைப் பற்றியுள்ள விமர்சனம் இவரின் சகோதரர் இறந்துவிட்டபோது அதனால் பாதிப்புக்குள்ளாகி ஹதீஸ்களை தவறாக அறிவித்துள்ளார். இதுவும் இவரின் கடைசிக் காலத்தில் ஏற்பட்டதாகும் என்பது மட்டுமே. இவ்வாறு தவறாக அறிவித்துள்ள செய்திகள் சிலவை என்பதை சில அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். இது அந்தவகை செய்திகளில் அடங்காது.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸாலிஹ்-தக்வான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, இப்னு மாஜா-, அபூதாவூத்-3852 , திர்மிதீ-1860 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-7197 , குப்ரா பைஹகீ-, …


  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் மனீஃ —> யஃகூப் பின் வலீத் —> இப்னு அபூதிஃ-ப் —> ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இப்னுல் ஜஃத்-2837 , திர்மிதீ-1859 , ஹாகிம்-7127 , 7198 ,


  • முஸ்னத் இப்னுல் ஜஃத்-2837.

مسند ابن الجعد (ص: 415)
2837 – حَدَّثَنِي جَدِّي، نَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ، فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


  • ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, குப்ரா பைஹகீ-,


  • ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-,


2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.