கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் ஆதமுடைய மகன் இவ்வாறு சாப்பிடுவதால் ஷைத்தான் கோபமடைகிறான். மேலும் அவன், “பழைய பேரீத்தம்பழத்துடன் புதிய பேரீத்தம்பழத்தை சாப்பிடும் அளவிற்கு ஆதமுடைய மகன் உயிர்வாழ்கிறான் என்றும் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(ஹாகிம்: 7138)حَدَّثَنَا أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْعَنْبَرِيُّ، ثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدٌ التَّيْمِيُّ، وَأَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ دَاودَ الْعَتَكِيُّ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالُوا، ثَنَا أَبُو زُكَيْرٍ يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، يَذْكُرُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كُلُوا الْبَلَحَ بِالتَّمْرِ فَإِنَّ الشَّيْطَانَ إِذَا أَكَلَهُ ابْنُ آدَمَ غَضِبَ وَقَالَ بَقِيَ ابْنُ آدَمَ حَتَّى أَكَلَ الْجَدِيدَ بِالْخَلَقِ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7138.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7190.
- இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
இந்த செய்தியை தனது மவ்ளூஆத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இந்த செய்தி அடிப்படையற்றது என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்த செய்தியை அபூஸுகைர் தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார்.
(நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால்-5193)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3330 .
சமீப விமர்சனங்கள்