தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7139

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

7139. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஒரு முஸ்லிமுக்கு, அவரின் முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். அது முடியவில்லை என்றால், மூன்றில் ஒரு பாகம் உணவுக்கும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்.

அறிவிப்பவர்: (ரலி)

மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

المقدام بن معدي كرب

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: மிக்தாம் பின் மஃதீகரிப்

தந்தை பெயர்: மஃதீகரிப்

வம்சம்: அல்கிந்தீ

புனைப்பெயர்: அபூ கரீமா, அபூ யஹ்யா

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஷாம், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 4

இறப்பு: ஹிஜ்ரி 87, ஷாம், ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

மிக்தாம் பின் மஃதீகரிப் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் அபூ கரீமா மற்றும் அபூ யஹ்யா என்ற குன்யாக்களால் அறியப்பட்டவர். இவர் ஷாம் பகுதியில், குறிப்பாக ஹிம்ஸ் நகரில் வசித்தார்.

ஹிஜ்ரிக்கு முன் 4 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஹிஜ்ரி 87 ஆம் ஆண்டு தனது 91 ஆவது வயதில் ஷாம், ஹிம்ஸ் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), காலித் பின் அல்வலீத், முஆத் பின் ஜபல், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஹ்யா பின் மிக்தாம் பின் மஃதீகரிப், ஸாலிஹ் பின் யஹ்யா பின் மிக்தாம், காலித் பின் மஃதான், ஹபீப் பின் உபைது அர்ருஹ்பீ, யஹ்யா பின் ஜாபிர் அத்தாயீ, ஆமிர் அஷ்ஷஅபீ, ஷுரைஹ் பின் உபைது, அப்துர்ரஹ்மான் பின் அபூ அவ்ஃப் அல்ஜுரஷீ, அப்துர்ரஹ்மான் பின் மைஸரா அல்ஹழ்ரமீ, ராஷித் பின் ஸஃத், அபூ ஆமிர் அல்ஹவ்ஸனீ, முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ

வேறு பெயர்கள்: மிக்தாம்


ஆதாரம்: muslimscholars.info (5304) · Should verify


حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، أَنْبَأَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، أَنْبَأَ ابْنُ وَهْبٍ، قَالَ: وَأَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ جَابِرٍ، يُحَدِّثُ عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا وَعَى ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ الْمُسْلِمِ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7139.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7191.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் ஜாபிர் அவர்கள், மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-17186 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.