நீ பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உனது வலது காலால் ஆரம்பிப்பதும், நீ வெளியேறினால் உனது இடது காலால் ஆரம்பிப்பதும் நபிவழியாகும் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் குர்ரா (ரஹ்)
(ஹாகிம்: 791)حَدَّثَنَا أَبُو حَفْصٍ عُمَرُ بْنُ جَعْفَرٍ الْمُفِيدُ الْبَصْرِيُّ، ثنا أَبُو خَلِيفَةَ الْقَاضِي، ثنا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، ثنا شَدَّادٌ أَبُو طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ، يُحَدِّثُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ كَانَ، يَقُولُ:
«مِنَ السُّنَّةِ إِذَا دَخَلْتَ الْمَسْجِدَ أَنْ تَبْدَأَ بِرِجْلِكَ الْيُمْنَى، وَإِذَا خَرَجْتَ أَنْ تَبْدَأَ بِرِجْلِكَ الْيُسْرَى»
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، فَقَدِ احْتَجَّ بِشَدَّادِ بْنِ سَعِيدٍ أَبِي طَلْحَةَ الرَّاسِبِيِّ وَلَمْ يُخَرِّجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-791.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-743.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூஹஃப்ஸ்-உமர் பின் ஜஃபர் என்பவர் பற்றி அபூமுஹம்மது அஸ்ஸபீஈ அவர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார். காரணம் அவர் தான் கேட்காத ஒன்றை கேட்டதாக கூறியது தான். என்றாலும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-5592, தாரீகு பக்தாத்-5996, தாரீகுல் இஸ்லாம்-225)…
- என்றாலும் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். இல்லை என்று வைத்துக்கொண்டாலும் தவறுதலாக கூறுபவர் என்ற அடிப்படையில் இவர் பலவீனமானவர் என ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோரின் ஆசிரியர்களைப் பற்றி குறிப்பு எழுதிய அபுத்தய்யிப் அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அர்ரவ்ளுல் பாஸிம்-661, அத்தலீலுல் முக்னீ-341)
- மேலும் இந்த செய்தியில் வரும் ராவீ-19079-ஷத்தாத் பின் ஸயீத்-அபூதல்ஹா என்பவரைப் பற்றி அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ் அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியதாக புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார். பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களும், இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். - இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னுமயீன், அபூகைஸமா, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர். - முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்கள் இவரின் ஒரு செய்தியை துணை ஆதாரமாகக் கூறியுள்ளார். பார்க்க: முஸ்லிம்-5344 (வெளிப்படையில் பார்க்கும் போது துணை ஆதாரமாக இல்லாமல் தனி ஆதராரமாக கூறியதைப் போன்று தெரிந்தாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது தஹ்தீபில் இதை துணை ஆதாரம் என்றே கூறியுள்ளார்). - என்றாலும் உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இவர் தனித்து அறிவிப்பவர் என்பதால் மற்ற அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/155, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/69, தக்ரீபுத் தஹ்தீப்-1/432, அல்காஷிஃப்-2/567)
- இவரைப் பற்றி மட்டும் உள்ள விமர்சனத்தை கூறிய அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-2478)
- என்றாலும் நபி (ஸல்) அவர்கள், பல செயல்களில் வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பி செயல்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரி-168 , 426 …)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-791 , குப்ரா பைஹகீ-4322 ,
சமீப விமர்சனங்கள்