தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-8384

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய சமுதாயத்திலிருந்து சில கோத்திரங்கள் இணைவைப்பாளர்களோடு இணைந்து கொள்வதும், சிலைகளை வணங்குவதும் ஏற்படும் வரை கியாமத் நாள் ஏற்படாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(ஹாகிம்: 8384)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزَّاهِدُ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْقَاضِي، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثَنَا رَيْحَانُ بْنُ سَعِيدٍ، ثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، حَدَّثَنِي أَبُو أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

«لَنْ تَقُومَ السَّاعَةُ عَلَى أُمَّتِي حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْهَا بِالْمُشْرِكِينَ، وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْهَا الْأَوْثَانَ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8384.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8458.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20662-அப்பாத் பின் மன்ஸூர் என்பவர் பற்றி யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளார். இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்பதால் இவரின் ஹதீஸ்களை விடவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். இவர் பலவீனமானவர்; இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களிடமிருந்து அப்பாஸ் தூரீ பிறப்பு ஹிஜ்ரி 185
    இறப்பு ஹிஜ்ரி 271
    வயது: 86
    அறிவித்துள்ளார்.
  • மற்ற அதிகமான அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் இக்ரிமா, அய்யூப் வழியாக அறிவிக்கும் செய்திகளில் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்றும், தத்லீஸ் செய்பவர் என்றும், இறுதி காலத்தில் இவரின் நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/86, தஹ்தீபுத் தஹ்தீப்-2/282, தக்ரீபுத் தஹ்தீப்-1/482)

இந்த செய்தி சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

மேலும் பார்க்க: முஸ்லிம்-5538 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.