யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதினால், அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது, அவன் சாட்டப்படமாட்டான்-அல்லது அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)
(ஹாகிம்: 8562)وَأَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، ثَنَا أَبُو الْأَحْوَصِ الْقَاضِي، ثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
مَنْ قَرَأَ سُورَةُ الْكَهْفَ كَمَا أُنْزِلَتْ، ثُمَّ خَرَجَ إِلَى الدَّجَّالِ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ – أَوْ: لَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخْرِجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8562.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8661.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நுஐம் பின் ஹம்மாத் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
- இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். - கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன….
இந்தக் கருத்தில் வரும் செய்திகளை பார்க்க : ஹாகிம்-2072 .
சமீப விமர்சனங்கள்