ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அவர்களின் சகோதரர் மகன்களில் ஒருவருக்குமிடையில் ஒரு பிரச்சனை இருந்தது. அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர் எழுந்து பள்ளிவாசலுக்கு செல்ல தயாரானார்.
உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)
(இப்னு ஹிப்பான்: 2074)أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَهْلٍ الْجَعْفَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي حَزْرَةَ الْمَدِينِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ:
كَانَ بَيْنَ عَائِشَةَ وَبَيْنَ بَعْضِ بَنِي أَخِيهَا شَيْءٌ، فَدَخَلَ عَلَيْهَا فَلَمَّا جَلَسَ جِيءَ بِالطَّعَامِ، فَقَامَ إِلَى الْمَسْجِدِ فَقَالَتْ لَهُ: اجْلِسْ غُدَرُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلِّي أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ».
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2074.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-2114.
- இந்த செய்தியுடன் காஸிம் பின் முஹம்மத் சம்பந்தப்பட்டவர் என்றாலும் இந்த செய்தியை இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாக வந்திருப்பது தவறு என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .
சமீப விமர்சனங்கள்