தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-2920

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். மக்கள் அவர்களுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவார்கள். ஒருவருடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவருடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். ஒருவருடைய மார்க்கப் பிடிப்பு பலவீனமாக இருந்தால் அவருக்கு ஏற்படும் சோதனைகள் குறைவாக இருக்கும். ஒரு (நம்பிக்கைகொண்ட) மனிதர் மக்களிடம் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவர் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவரை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 2920)

ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُسْلِمَ كُلَّمَا ثَخُنَ دِينُهُ كَثُرَ بَلَاؤُهُ، وَمَنْ رَقَّ دِينُهُ خُفِّفَ ذَلِكَ عَنْهُ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ:

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ، يُبْتَلَى النَّاسُ عَلَى قَدْرِ دِينِهِمْ، فَمَنْ ثَخُنَ دِينُهُ، اشْتَدَّ بَلَاؤُهُ، وَمَنْ ضَعُفَ دِينُهُ ضَعُفَ بَلَاؤُهُ، وَإِنَّ الرَّجُلَ لِيُصِيبَهُ الْبَلَاءُ حَتَّى يَمْشِيَ فِي النَّاسِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2920.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-2996.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44501-முஸய்யிப் பின் ராஃபிஃ அவர்கள் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்பதால் இது முர்ஸலான செய்தியாகும். காரணம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஆமிர் பின் அப்தா-அபூஇயாஸ் (ரலி) போன்ற இரு நபித்தோழர்களைத் தவிர வேறு யாரிடமும் ஹதீஸ்களை கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-40/80, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/498)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • இதனால் தான் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் ஆஸிம் பின் பஹ்தலா அவர்கள், முஸ்அப் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) என்று அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூள் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-590)

மேலும் பார்க்க: திர்மிதீ-2398 .

2 comments on Ibn-Hibban-2920

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.