தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3001

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்கள், நபி என்பதற்கு அடையாளமாக இருந்த இறை அற்புதமான நபித்துவ முத்திரை பற்றிய உண்மை நிலை.

3001. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் முதுகில் (தோள்பட்டை அருகில்) நபித்துவ முத்திரை, கலிமண் குண்டு போன்று (அவர்களது உடலின் நிறத்திலேயே) இருந்தது.

மேலும் அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (முஹம்மத்-ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று எழுதப்பட்டிருந்தது.


ذِكْرُ حَقِيقَةِ الْخَاتَمِ الَّذِي كَانَ لِلنَّبِيِّ صَلى الله عَلَيه وسَلم مُعْجِزَةً لِنُبُوَّتِهِ.

أَخبَرنا نَصْرُ بْنُ الْفَتْحِ بْنِ سَالِمٍ الْمُرَبَّعِيُّ الْعَابِدُ، بِسَمَرْقَنْدَ، حَدثنا رَجَاءُ بْنُ مُرَجَّى الْحَافِظُ، حَدثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَاضِي سَمَرْقَنْدَ، حَدثنا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

كَانَ خَاتَمُ النُّبُوَّةِ فِي ظَهْرِ رَسُولِ اللهِ صَلى الله عَلَيه وسَلم مِثْلَ الْبُنْدُقَةِ مِنْ لَحْمٍ عَلَيْهِ، مَكْتُوبٌ مُحَمَّدُ رَسُولِ اللهِ.


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3001.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-6437.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இமாம்

2 . நஸ்ர் பின் ஃபத்ஹ்

3 . ரஜாஉ பின் முரஜ்ஜாஃ

4 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்

5 . இப்னு ஜுரைஜ்

6 . அதாஉ பின் அபூரபாஹ்

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46461-நஸ்ர் பின் ஃபத்ஹ் என்பவர் பற்றி யாரும் பலவீனமானவர் என்று கூறவில்லை என இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் மேற்கண்ட செய்தியை அறிவித்திருப்பதால் இதை இவர் இட்டுக்கட்டியுள்ளார் என்று கருதுகிறேன் என்று கூறிவிட்டு இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே (இவரைப் பற்றி விமர்சனம் இல்லை என்பதால்) பலமானவர் என்று கூறியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை முன்னுள்ளவர்கள் யாரும் பலவீனமானவர் என்று கூறவில்லை. எனவே இவர் அறிவிக்கும் செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுவது சரியல்ல. மற்ற பலமான செய்திகளில் இரண்டாவது பகுதி இல்லை என்பதால் அவைகளுக்கு மாற்றமாக இருப்பதால் இது ஷாத் ஆகும் என்று கூறியுள்ளார்.
  • மேலும், கடிதங்களுக்கு முத்திரையிட பயன்படுத்தப்படும் காதம்-மோதிரத்தையும், நபித்துவ முத்திரையான கட்டியையும் சேர்த்து சில அறிவிப்பாளர்கள் தவறாக புரிந்துக் கொண்டனர் என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-8/265)

  • இவ்வாறு தவறாக புரிந்துக் கொண்டவர், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவராக இருக்கலாம் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: அல்ஜாமிஉல் காமில்-1/558)


  • மேலும், இதில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) அவர்களை பார்த்துள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்மராஸீல்-565, அல்இக்மால்-9/241, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/348)

எனவே இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதி பலவீனமானது.


7 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-3001,


இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4682.

இப்னு ஹிப்பான் இமாம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

நஸ்ர் பின் ஃபத்ஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ரஜாஉ பின் முரஜ்ஜாஃ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னு ஜுரைஜ்

ابن جريج

இறப்பு: ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ்

தந்தை பெயர்: அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ்

வம்சம்: உமைய்யா கிளையின் அடிமை

புனைப்பெயர்: அபூ வலீத், அபூ காலித்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: ரோம், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 80, ரோம்

இறப்பு: ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு ஜுரைஜ் ரஹ் அவர்கள் அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ் என்ற இயற்பெயர் கொண்ட ஒரு மிகப் பலமான தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 80ல் ரோம் நகரில் பிறந்தார். மக்காவில் வசித்த இவர், ஹிஜ்ரி 150 அல்லது அதற்குப் பிறகு மரணமடைந்தார்.

இவர் ஹதீஸ் நூல்களைத் தொகுத்த முதல் அறிஞர்களில் ஒருவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அதா பின் அபூரபாஹ், அஸ்ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், நாஃபிஉ, ஹிஷாம் பின் உர்வா, மூஸா பின் உக்பா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் பின் அபூமுஸ்லிம் அல்அஹ்வல், ஸஃப்வான் பின் ஸுலைம் அல்மதனீ, தாவூஸ் பின் கைஸான், அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அபூமுலைக்கா, ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல் அஸீஸ் (இப்னு ஜுரைஜின் மகன்), முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஜுரைஜ், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாஈ, அல்லைஸ் பின் ஸஃத், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, ஹம்மாத் பின் ஸைத், அப்துல் வஹ்ஹாப் பின் அப்துல் மஜீத் அஸ்ஸகஃபீ, ஈஸா பின் யூனுஸ், வுஹைப் பின் காலித், மூஸா பின் தாரிக், அபூ குர்ரா, ஹஃப்ஸ் பின் கியாஸ்

வேறு பெயர்கள்: அப்துல் மலிக் பின் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ், அபூ வலீத், அபூ காலித்


ஆதாரம்: muslimscholars.info (11070) · Should verify

அதாஉ பின் அபூரபாஹ்

அதாஃ-அல்மக்கீ (ரஹ்) – 'Ata' bin Abi Rabah

இறப்பு: ஹிஜ்ரி 114, மக்கா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அதா பின் அஸ்லம்

தந்தை பெயர்: அஸ்லம்

வம்சம்: அல்குரஷீ, மவ்லா

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 27, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 114, மக்கா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அதா பின் அபூ ரபாஹ் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 27ல் மக்காவில் பிறந்தார்கள். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். மக்காவின் முஃப்தியாகவும், ஹதீஸ் கலையில் மிகப் பலமானவராகவும் திகழ்ந்தார்.

அபூ முஹம்மத் என்பது இவரின் குன்யா ஆகும். இவர் ஹிஜ்ரி 114ல் மக்காவில் மரணித்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், முஆவியா பின் அபூ ஸுஃப்யான், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் அர்கம், அபூ ஹுரைரா, ஆயிஷா பின்த் அபூ பக்ர், உம்மு ஸலமா, உம்மு ஹானீ பின்த் அபூ தாலிப், உர்வா பின் அஸ்ஸுபைர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஃகூப் பின் அதா, முஜாஹித் பின் ஜப்ர், அஸ்ஸுஹ்ரீ, அய்யூப் அஸ்ஸக்தியானீ, முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ரஸ், அல்கம் பின் உதைபா, ஸுலைமான் அல்அஃமஷ், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் தீனார், இப்னு இஸ்ஹாக், அபூ ஹனீஃபா

வேறு பெயர்கள்: அதா பின் அபூ ரபாஹ், அதா பின் அஸ்லம்


ஆதாரம்: muslimscholars.info (11029) · Should verify

இப்னு உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.