தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-4660

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார் என்பது பற்றிய விளக்கம்.

நிம்ரான் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (தந்தையை இழந்த) அனாதையான சிறுவர்களாக உம்முத்தர்தா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், எங்கள் தலையை வறுடிக்கொடுத்து விட்டு “ஒரு நற்செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்”. நீங்கள் உங்கள் தந்தையின் பரிந்துரையை பெறவேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறிவிட்டு,

(மறுமை நாளில் ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (எனது கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(இப்னு ஹிப்பான்: 4660)

ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الشَّهِيدَ فِي الْقِيَامَةِ يَشْفَعُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ الْمُعَدَّلُ، بِالْفُسْطَاطِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ رَبَاحٍ الذِّمَارِيُّ، عَنْ نِمْرَانَ بْنِ عُتْبَةَ الذِّمَارِيِّ، قَالَ:

دَخَلْنَا عَلَى أُمِّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامٌ صِغَارٌ، فَمَسَحَتْ رُءُوسَنَا، وَقَالَتْ: أَبْشِرُوا يَا بَنِيَّ، فَإِنِّي أَرْجُو أَنْ تَكُونُوا فِي شَفَاعَةِ أَبِيكُمْ، فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الشَّهِيدُ يَشْفَعُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4660.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-4763.




மேலும் பார்க்க: அபூதாவூத்-2522 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.