பாடம்:
முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொள்வது கண்டனத்திற்குரியது. ஏனெனில் அதனால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைப்பது தூரமான விஷயம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.
அப்போது, “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 5661)ذِكْرُ الزَّجْرِ عَنِ الْمُشَاحَنَةِ بَيْنَ الْمُسْلِمِينَ إِذِ الْغُفْرَانُ يَكُونُ عَنِ الْمُشَاحِنِ بَعِيدًا
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ جَلَّ وَعَلَا لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5661.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-5778.
சமீப விமர்சனங்கள்