தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-7025

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

வானவர்களால் குளிப்பாட்டப்பட்ட ஹன்ளலா பின் அபூஆமிர் (ரலி)

…உங்களின் தோழர் ஹன்ளலாவை வானவர்கள் குளிப்பாட்டுகின்றனர். எனவே, அவரின் மனைவியிடம் என்னவென்று விசாரியுங்கள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவரிடம் விசாரிக்கப்பட்டபோது) அவர் (யுத்த அழைப்பின்) பெரும்சப்தத்தைக் கேட்டு பெருந்தொடக்கில் இருந்த நிலையிலேயே யுத்தத்திற்கு சென்றார் என்று அவரின் மனைவி கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதன் காரணமாகவே அவரை வானவர்கள் குளிப்பாட்டினர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 7025)

ذِكْرُ حَنْظَلَةَ بْنِ أَبِي عَامِرٍ غَسِيلِ الْمَلَائِكَةِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

وَقَدْ كَانَ النَّاسُ انْهَزَمُوا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى بَعْضُهُمْ إِلَى دُونِ الْأَعْرَاضِ عَلَى جَبَلٍ بِنَاحِيَةِ الْمَدِينَةِ، ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ كَانَ حَنْظَلَةُ بْنُ أَبِي عَامِرٍ الْتَقَى هُوَ وَأَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، فَلَمَّا اسْتَعْلَاهُ حَنْظَلَةُ رَآهُ شَدَّادُ بْنُ الْأَسْوَدِ، فَعَلَاهُ شَدَّادٌ بِالسَّيْفِ حَتَّى قَتَلَهُ، وَقَدْ كَادَ يَقْتُلُ أَبَا سُفْيَانَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ صَاحِبَكُمْ حَنْظَلَةَ تُغَسِّلُهُ الْمَلَائِكَةُ، فَسَلُوا صَاحِبَتَهُ»، فَقَالَتْ: خَرَجَ وَهُوَ جُنُبٌ لَمَّا سَمِعَ الْهَائِعَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَذَاكَ قَدْ غَسَّلَتْهُ الْمَلَائِكَةُ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-7025.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-7183.




  • இந்த செய்தியை அறிவிக்கும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், உஹதுப் போரில் பங்கேற்றவர் அல்ல. அப்போது அவருக்கு இரண்டு வயதே இருந்தது. எனவே இது ஒரு நபித்தோழர் மற்றொரு நபித்தோழரை விட்டு அறிவிக்கும் முர்ஸலுஸ் ஸஹாபீ என்ற வகையில் சேரும். இந்த வகையும் ஆதாரத்திற்கேற்றது தான் என்பதே பெரும்பாலான ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்தாகும்.
  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், (முஹம்மது பின் இஸ்ஹாகின் காரணமாக) ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-326)

(இந்த செய்தியைப் பற்றிய கூடுதல் ஆய்வுகள்: தீவானுஸ் ஸுன்னஹ்-2625, 21/304)

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-7025 , ஹாகிம்-4917, குப்ரா பைஹகீ-6814 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12094 .

3 . ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஃ-பீ வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11000 .

4 . ஆஸிம் பின் உமர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-6815 .

5 . இப்ராஹீம் பின் ஈஸா வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-4916 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.