ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருநாள்) அது ரமளானின் முதல் நாளாக இருக்குமோ? என சந்தேகத்திற்குரிய நாளில் இக்ரிமா (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (என்னைப் பார்த்ததும்) ‘அருகில் வாருங்கள்’ என்று (சாப்பிட) அழைத்தார்கள். அதற்கு, நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னேன். அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அருகில் வந்து சாப்பிட வேண்டும்’ என்று கூறினார்கள்.
(அவர்கள் இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்) என்று கூறாமல் சத்தியம் செய்வதை நான் கண்டதால் நீங்கள் கூறும் கூற்றிற்கு ஆதாரமாக உள்ள) ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டேன்.
அதற்கவர்கள், “ரமளான் மாதத்திற்கு (ஓரிரு நாள்களுக்கு) முன்பாக நோன்பு வைத்து வரவேற்காதீர்கள். (ரமளான் முதல்) பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள். (அடுத்த மாதம் ஷவ்வால்) பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கும், பிறை காண்பதற்குமிடையே மேகமூட்டமோ, இருளோ குறுக்கிடுமானால் ஷஅபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாள்களாக நிறைவு செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.
(ibn-khuzaymah-1912: 1912)حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ الْبَزَّارُ، نا يَحْيَى بْنُ كَثِيرٍ، ثنا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ قَالَ:
دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، وَهُوَ يَأْكُلُ فَقَالَ: ادْنُ فَكُلْ، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ قَالَ: وَاللَّهِ لَتَدْنُوَنَّ قُلْتُ: فَحَدِّثْنِي قَالَ: ثنا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكَ وَبَيْنَ مَنْظَرِهِ سَحَابٌ أَوْ قَتَرَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ»
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1912.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்