தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

முன்னுரை:

அத்தியாயம்: 1

இறைநம்பிக்கை, நபித்தோழர்களின் சிறப்புகள், கல்வி.

பாடம்: 1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றுவது.

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு கட்டளையிட்டால்  அதை நீங்கள் கடைபிடியுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 1)

بسم الله الرحمن الرحيم

(وصلى الله على سيدنا محمد وآله وصحبه ومحبيه)

[افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم]

بَابُ اتِّبَاعِ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا»


Ibn-Majah-Tamil-1.
Ibn-Majah-TamilMisc-1.
Ibn-Majah-Shamila-1.
Ibn-Majah-Alamiah-1.
Ibn-Majah-JawamiulKalim-1.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)

  • என்றாலும் இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: புகாரி-7288 .

5 comments on Ibn-Majah-1

  1. யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்க வில்லையோ அவர் நம்முடைய துழும் இடத்திற்கு வர வேண்டாம்
    இப்னுமாஜா 323

    இதன் உண்மைத் தன்மை என்ன

      1. நீங்கள் எல்லா ஹதீஸ்களையும் மொழிப்பெயர்ப்பு செய்துவிட்டீர்களா?
        https://sunnah.com/ibnmajah:4036
        இந்த ஹதீஸை மொழிபெயர்ப்பு செய்து அதன் தரத்தை விவரியுங்கள்.

        1. அஸ்ஸலாமு அலைக்கும்.
          இன்னும் எல்லா ஹதீஸ்களையும் மொழிப்பெயர்ப்பு செய்யவில்லை. பணிகள் நடைப்பெற்று வருகிறது. துஆச் செய்யவும்.
          பார்க்க: இப்னு மாஜா-4036 .

          1. அல்ஹம்துலில்லாஹ். பணிகள் நடைப்பெறட்டும்.
            உங்கள் கான்டெக்ட் பண்ண முடியுமா?

            அமயம் சமயம் முக்கியமாக நேரங்களில் சில ஹதீஸ்களின் மொழிப்பெயர்ப்புகள் தேவைப்படுகிறது.

            அதை கேட்டால் மொழிப்பெயர்ப்பு செய்து தருவீர்களா?

            உங்களை தொடர்புக்கொண்டால் சுலபமாக மொழிபெயர்ப்பு கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்.

            தொடர்புக்கொள்ளலாமா?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.