தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1123

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில், அல்லது வேறு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னுமாஜா: 1123)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الْأَيْلِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1123.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1113.




  • ஜுமுஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார் என்ற கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளது என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
  • ஜமாஅத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார் என்ற கருத்தில் வரும் செய்திகளே சரியாக உள்ளன. இந்த செய்தியின் படி ஜுமுஆ தொழுகையும் அதில் அடங்கிவிடும். எனவே மேற்கண்ட செய்தியின் கருத்து சரியானது. அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பக்கிய்யது பின் வலீத் பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/174)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> ஸாலிம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க : இப்னு மாஜா-1123 , முஸ்னத் பஸ்ஸார்-6022 , நஸாயீ-557 , குப்ரா நஸாயீ-1552 , தாரகுத்னீ-1606 ,

மேற்கண்ட முறையில் பகிய்யது பின் வலீத், யூனுஸ் பின் யஸீத் வழியாக ஸுஹ்ரீ —> ஸாலிம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) என்று அறிவிக்கும் இந்த அறிவிப்பாளர்தொடர் தவறானது என்றும், ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் “யார் ஜமாஅத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைகிறாரே அவர் அந்த ஜமாஅத்தை அடைந்தவர் தான்” என்ற கருத்தே சரியானது என்றும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். (ஜுமுஆத் தொழுகை என்பது தவறாகும்)

(நூல்: இலலுல் ஹதீஸ்-491 (2/431)

எனவே மேற்கண்ட செய்தியின் கருத்து பலவீனமானதாகும்.

  • மேலும் இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாக வரும் செய்திகளில் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்திருக்கும் செய்திகளை விட இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) சொல்லாக வந்திருக்கும் செய்திகளே அறிவிப்பாளர்தொடரில் சரியாக உள்ளன.

……..

மேலும் பார்க்க: நஸாயீ-1425 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.