தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1221

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுதுக் கொண்டிருக்கும்போது) ஒருவருக்கு வாந்தி அல்லது சில்லுமூக்கு உடைதல் அல்லது கக்கல் அல்லது இச்சைக் கசிவு ஆகியவை ஏற்பட்டுவிட்டால் அவர் திரும்ப சென்று உளூச் செய்து விட்டு தமது தொழுகையை விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடரட்டும். இதற்கிடையே அவர் (யாரிடமும்) பேசிவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(இப்னுமாஜா: 1221)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْيٌ، فَلْيَنْصَرِفْ، فَلْيَتَوَضَّأْ ثُمَّ لِيَبْنِ عَلَى صَلَاتِهِ، وَهُوَ فِي ذَلِكَ لَا يَتَكَلَّمُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1221.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1211.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள், ஷாம்வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியிருப்பதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/142)

இந்த செய்தியில் வரும் இவரின் ஆசிரியர் இப்னு ஜுரைஜ் அவர்கள், ஷாம்வாசி இல்லை. ஹிஜாஸ்வாசி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் இந்த செய்தி நபித்தோழர் கூறப்படாமல் முர்ஸலாக வந்துள்ளது. அதற்கே முன்னுரிமை அளித்து இந்த செய்தியை முர்ஸல் என்றே முடிவு செய்ய வேண்டும்.

இந்த செய்தி நிராகரிக்கப்படத்தக்க, மிக பலவீனமான செய்தி என்று பல ஹதீஸ்கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> இப்னு ஜுரைஜ் —> அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: இப்னு மாஜா-1221 , அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,

இப்னு ஜுரைஜ் —> அப்துல்அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்) —> நபி (ஸல்) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.