தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1620

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1620. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘(இறுதியாக) நோயுற்றுவிடுகிற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு – மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டேன்.

(இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.


حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

«مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ» قَالَتْ: فَلَمَّا كَانَ مَرَضُهُ الَّذِي قُبِضَ فِيهِ، أَخَذَتْهُ بُحَّةٌ، فَسَمِعْتُهُ يَقُولُ: «مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ» فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1620.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.



 

 


மேலும் பார்க்க: புகாரி-4586.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.