தனது அடியார்கள், நிராசையடைவதையும் அவர்களின் நிலையை சீக்கிரம் மாற்ற இருப்பதையும் (நினைத்து) நம்முடைய இறைவன் சிரிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இறைவன் சிரிப்பானா! என்று (ஆச்சரியத்துடன்) கேட்டேன். அதற்வகவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், சிரிக்கும் இறைவனிடமிருந்து நாம் நன்மையை இழந்துவிடமாட்டோம் என்று கூறினேன்.
அறிவிப்பவர்: அபூரஸீன் (லகீத் பின் ஆமிர்-ரலி)
(இப்னுமாஜா: 181)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ حُدُسٍ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«ضَحِكَ رَبُّنَا مِنْ قُنُوطِ عِبَادِهِ، وَقُرْبِ غِيَرِهِ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَوَ يَضْحَكُ الرَّبُّ، قَالَ: «نَعَمْ» ، قُلْتُ: لَنْ نَعْدَمَ مِنْ رَبٍّ يَضْحَكُ خَيْرًا
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-181.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-177.
இந்த செய்தியின் கருத்து அல்லாஹ்வின் அருளைவிட்டு நிராசை அடைந்துவிடக்கூடாது என்ற வசனத்திற்கு முரணாகாது. கடுமையான துன்பம் ஏற்படும் போது பலவீனமான ஈமான் கொண்டோருக்கு இந்த நிலை ஏற்படலாம். அவ்வாறு நிராசை அடையக்கூடாது; அல்லாஹ்வின் உதவி விரைவில் கிடைக்கும் என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47695-வகீஃ பின் ஹுதுஸ் (வகீஃ பின் உதுஸ்) என்பவர் பற்றி இப்னு குதைபா, இப்னுல் கத்தான் போன்றோர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/314)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1037)
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் ஷுஃபா அவர்கள் தான் இவரின் பெயரை வகீஃ பின் உதுஸ் என்று கூறினார். அவரைப் போன்றே ஹுஷைமும் மற்றவர்களும் கூறுகின்றனர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் வகீஃ பின் ஹுதுஸ் என்று கூறியுள்ளார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமின் கூற்றே சரியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அஸ்ஸிகாத்-5/496)
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டும் இவரைப் பற்றி பலமானவர்களின் பட்டியலில் கூறவில்லை.
1 . இந்த செய்தி பற்றியும், இதுபோன்று அல்லாஹ்வின் சில தன்மைகள் பற்றி வந்துள்ள செய்திகள் பற்றி அபூஉபைத்-காஸிம் பின் ஸல்லாம் என்ற தாபிஈ அவர்களிடம் கேட்கப்பட்டபோது இவை அனைத்தும் பலமானவர்களின் வழியாக வந்துள்ளது. இவைகளை நம்புகிறோம்; ஆனால் அல்லாஹ்விற்கு கை இருப்பது, கால் இருப்பது, அல்லாஹ் சிரிப்பது என்பது பற்றி யாரும் எங்களுக்கு விளக்கமளிக்கவில்லை. நாங்களும் அதைப்பற்றி விளக்கமளிக்க மாட்டோம். அவற்றை நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
(நூல்: ஷரஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னதி வல்ஜமாஅஹ்-3/581).
இந்தக் கருத்து, கொள்கை பற்றிய பல நூல்களில் வந்துள்ளது.
2 . மேலும் இவர் இடம்பெறும் ஒரு செய்தியை இப்னுமயீன் அவர்கள் நல்ல செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-3/133)
3 . ஹுஸைன் பின் இப்ராஹீம் என்ற அறிஞர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: அல்அபாதீலு வல்மனாகீரு வஸ்ஸிஹாஹு வல்மஷாஹீர்-1/385, அத்தத்யீலு அலா குதுபில் ஜரஹ்-1/339)
எனவே இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார்.
- ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், வகீஃ பின் ஹுதுஸ் அறியப்படாதவர் என்ற கருத்தின்படி இவரை பலவீனமானவர் என்று கூறினாலும் இந்த கருத்து இடம்பெறும் ஒரு நீண்ட செய்தியின் மூலம் இந்தக் கருத்தை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-2810)
1 . இந்தக் கருத்தில் அபூரஸீன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1188 , அஹ்மத்-16187 , 16201 , 16206 , இப்னு மாஜா-181 , அல்முஃஜமுல் கபீர்-469 , ஹாகிம்-,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4885 .
3 . இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4892 .
Tharam