தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2304

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கால்நடை வளர்ப்பு.

உம்முஹானீ பின்த் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முஹானீ (ரலி)

(இப்னுமாஜா: 2304)

بَابُ اتِّخَاذِ الْمَاشِيَةِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ هَانِئٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2295.
Ibn-Majah-Shamila-2304.
Ibn-Majah-Alamiah-2295.
Ibn-Majah-JawamiulKalim-2297.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . இப்னு அபூஷைபா

3 . வகீஃ பின் ஜர்ராஹ்

4 . ஹிஷாம் பின் உர்வா

5 . உர்வா பின் ஸுபைர்

6 . உம்முஹானீ (ரலி)


  • இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அப்தா பின் ஸுலைமான், உஸ்மான் பின் மிக்தல் ஆகியோர், ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> நபி (ஸல்) 
    என்ற அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழரை கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.
  • இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமுஆவியா, வகீஃ, ஜஃபர் பின் அவ்ன், இஸ்மாயீல் பின் அய்யாஷ், முஹம்மத் பின் யஹ்யா, காஸிம் பின் மஃன் ஆகியோர், ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> உம்முஹானீ (ரலி) —> நபி (ஸல்)
    என்ற அறிவிப்பாளர் தொடரில் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் உம்முஹானீ (ரலி) அவர்களை கூறி மவ்ஸூலாக அறிவித்துள்ளனர்.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (15/ 367)
4072- وسئل عن حديث عروة، عن أم هانئ؛ أن رسول الله صلى الله عليه وسلم قال: اتخذوا الغنم؛ فإنها بركة.
فقال: يرويه هشام، واختلف عنه.
فرواه أبو معاوية الضرير، والقاسم بن معن، وجعفر بن عون، عن هشام، عن أبيه، عن أم هانئ.
ورواه عثمان بن مكتل، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ؛ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم جاء إلى أم هانئ، فقال لها ذلك، فيكون مرسلا.
ورواه ابن الهاد، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ.
وَالصَّحِيحُ قول من قال: عن هشام، عن أبيه، عن أم هانئ.

இந்தச் செய்தியின் சில அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவற்றில் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறப்பட்டுவரும் அறிவிப்பாளர்தொடர்களையே உண்மையானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-4072)

1 . என்றாலும் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள், உம்முஹானீ (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸ்களை கேட்டுள்ளதற்கு சான்று இல்லை; இந்த ஒரு செய்தியே உள்ளது என்றும்;

2 . யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அப்தா பின் ஸுலைமான், உஸ்மான் பின் மிக்தல் ஆகியோர் இதை முர்ஸலாக அறிவித்துள்ளார்கள் என்றும்;

3 . உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தி ஷாத் என்றும் கூறி முக்பில் பின் ஹாதீ, முஸ்தஃபா அல்அதவீ போன்ற அறிஞர்கள் இதை முர்ஸல் என்று முடிவு செய்வதே மிகச் சரியானது என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அஹாதீஸு முஅல்லா-525, ஃகாரதுல் ஃபஸ்ல்-1/88, ஸில்ஸிலதுல் ஃபவாஇத்-3/421)


1 . இந்தக் கருத்தில் உம்முஹானீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அப்தா பின் ஸுலைமான், உஸ்மான் பின் மிக்தல் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> நபி (ஸல்) 

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-2129, 2130, அல்இலலுல் வாரிதா-4072,


  • அல்இலலுல் வாரிதா-4072.

ورواه عثمان بن مكتل، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ؛ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم جاء إلى أم هانئ، فقال لها ذلك، فيكون مرسلا.


  • அபூமுஆவியா, வகீஃ, ஜஃபர் பின் அவ்ன், இஸ்மாயீல் பின் அய்யாஷ், முஹம்மத் பின் யஹ்யா, காஸிம் பின் மஃன் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> உம்முஹானீ (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-2131, அஹ்மத்-27381, இப்னு மாஜா-2304, அமாலீ-ஜுர்ஜானீ-186, அல்முஃஜமுல் கபீர்-1039, 1040, 1041, அல்இலலுல் வாரிதா-4072, ஷுஅபுல் ஈமான்-1189, தாரீகு பஃக்தாத்-2204, இஸாரதுல் ஃபவாஇத்-இப்னு அப்துல்பர்-240,


  • மூஸா பின் அப்துர்ரஹ்மான் —> உம்முஹானீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-26902,


  • அமாலீ-ஜுர்ஜானீ-186.

عدة مجالس من أمالي محمد بن إبراهيم الجرجاني – مخطوط (ص: 54)
186- حدثنا محمد بن يعقوب بن يوسف الأصم ، ثنا أحمد بن حازم بن أبي غرزة ، أنبا جعفر بن عون ، عن هشام بن عروة ، عن أبيه ، عن أم هانئ ، أن رسول الله صلى الله عليه وسلم ، دخل عليها فقال : ” هل عندكم من غنم ؟ ” قالت : لا يا رسول الله قال : ” فاتخذوها ” أو اتخذيها فإن فيها بركة “


  • இஸாரதுல் ஃபவாஇத்-240.

إثارة الفوائد (2/ 552)
جزء آخر من حديثه عن الدوري والصغاني
قرأته على أبي الفتح مُحَمَّد بن عبد الرحيم قال: أنا عبد الوهاب بن ظافر سماعا، أنا أبو طاهر السلفي، أنا مكي بن علان، أنا علي بن بشران، ثنا إسماعيل بن الصفار ومنه:
240 – حَدَّثَنَا عَبَّاسٌ، يَعْنِي: الدُّورِيَّ، ثنا جَعْفَرُ بْنُ عَوْنٍ، ثنا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ هَانِئٍ، أَنَّ رَسُولَ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهِمَا، فَقَالَ: ” هَلْ لَكُمْ مِنْ غَنَمٍ؟ ” قَالَتْ: لا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” اتَّخِذُوهَا فَإِنَّ فِيهَا بَرَكَةً “


2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹஃப்ஸ் பின் உமர், யஸீத் பின் ஹாத் —> ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அல்அவ்வலு வஸ்ஸானீ-இப்னு நஜீஹ்-4, முஃஜம் அபூபக்ர்-இப்னுல் முக்ரிஃ-703, தாரீகு பஃக்தாத்-2716,


  • அல்அவ்வலு வஸ்ஸானீ-இப்னு நஜீஹ்-4.

الأول والثاني من حديث أبي بكر محمد بن العباس بن نجيح البزاز – مخطوط (2/ 4)
(4) – حدثنا محمد بن غالب بن حرب، ثنا حفص بن عمر، ويعرف بالكفر في طاق الحراني، ثنا هشام بن عروة، عن أبيه، عن عائشة، أن النبي صلى الله عليه، قال: ” يا أم هانئ اتخذي غنما فإنها تغدوا وتروح بخير “


  • முஃஜம் அபூபக்ர்-இப்னுல் முக்ரிஃ-703

معجم ابن المقرئ (ص: 219)
703 – حَدَّثَنَا أُسَامَةُ بْنُ عَلِيِّ بْنِ سَعْدٍ، بِمِصْرَ ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، ثنا أَبُو زُرْعَةَ وَهْبُ اللَّهِ بْنُ رَاشِدٍ عَنْ حَيْوَةَ، أَخْبَرَنَا ابْنُ الْهَادِ، أَنَّ هِشَامَ بْنَ عُرْوَةَ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُمِّ هَانِئٍ: «اتَّخِذُوا الْغَنَمَ فَإِنَّ فِيهَا بَرَكَةً»


  • இப்ராஹீம் பின் அபூயஹ்யா —> ஒரு மனிதர் —> உர்வா பின் ஸுபைர் (ரஹ்) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அத்தத்வீன் ஃபீ அக்பாரி கஸ்வீன்-2/406,

التدوين في أخبار قزوين (2/ 406)
الحسن بْن الحسين القامي أَبُو عَبْد اللَّهِ الْقَزْوِينِيّ سَمِعَ أَبَا عمر عبد الواحد بْنَ مَهْدِيٍّ وَأَبَا عَبْدِ اللَّهِ الْقَطَّانَ
حَدِيثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَزِيدَ الْفَامِيِّ ثنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ بَشِيرٍ الصَّنْعَانِيُّ ثنا أَبُو سَالِمٍ عَبْدُ اللَّهِ بْنُ محمد ابن شُرَحْبِيلَ ثنا إبراهيم بْنُ أَبِي يَحْيَى عَنْ مَنْ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: “اتَّخِذُوا الْغَنَمَ فَإِنَّهَا بَرَكَةٌ”.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2305.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.