தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3906

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

கனவுகள் மூன்று வகை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். இன்னொரு வகை ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.

ஆகவே, உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவை கண்டால் அவர் விரும்பினால் மற்றவருக்குச் சொல்லட்டும்.

தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், அதைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 3906)

بَابُ الرُّؤْيَا ثَلَاثٌ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

الرُّؤْيَا ثَلَاثٌ: فَبُشْرَى مِنَ اللَّهِ، وَحَدِيثُ النَّفْسِ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ، فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّهَا، إِنْ شَاءَ، وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ، فَلَا يَقُصَّهُ عَلَى أَحَدٍ، وَلْيَقُمْ يُصَلِّي


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3906.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3904.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹவ்தா பின் ஃகலீஃபா நம்பகமானவர் என்றாலும் இவர் அவ்ஃப் அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தி பலவீனமானது என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் விமர்சித்துள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் 30 / 320 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-6990 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.