பாடம்:
இனவெறி.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார்; அல்லது இனவெறியில் கோபப்படுகிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 3948)بَابُ الْعَصَبِيَّةِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ زِيَادِ بْنِ رِيَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ، يَدْعُو إِلَى عَصَبِيَّةٍ، أَوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ، فَقِتْلَتُهُ جَاهِلِيَّةٌ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3948.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3946.
நான் நபி (ஸல்) அவர்களிடம்,
”அல்லாஹ்வின் தூதரே,
ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
இல்லை, மாறாக மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது)
கொடுமை செய்ய முற்படும் போது, அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஃபஸீலா (ரலி)
ஆதார நூல்: இப்னு மாஜா
ஹதீஸ் எண்: 3949
அஸ்ஸலாமு அலைக்கும், இதன் தரம் தேவை சகோ.
இல்லை இந்த ஹதீஸ் பலவீனமானது என இமாம் தாருஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹதீஸ் எண்: 3949 செய்தி பற்றி சிலர் பலவீனமானது என்றும் சிலர் ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர். இரண்டில் எதற்கு ஆதாரம் பலமாக உள்ளது என்பது பற்றி ஆய்வில் உள்ளது. பொறுமை காக்கவும்.