இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். பின்பு அவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைநம்பிக்கை கொண்டோரில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நற்குணம் உடையவரே மிகச் சிறந்தவர்” என்று பதில் கூறினார்கள்.
பிறகு அவர், “மூஃமின்களில் மிகவும் அறிவாளி யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் மரணத்தை அதிகம் நினைத்து, அதற்கு பின்னுள்ள (மறுமை) வாழ்விற்காக அழகியமுறையில் முன்னேற்பாடு செய்துக் கொண்டவரே அவர்களில் மிகவும்அறிவாளி ஆவார்” என்று பதில் கூறினார்கள்.
(இப்னுமாஜா: 4259)حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ: حَدَّثَنَا نَافِعُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ فَرْوَةَ بْنِ قَيْسٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ:
كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» ، قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا، أُولَئِكَ الْأَكْيَاسُ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4259.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-4259 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,
2 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
சமீப விமர்சனங்கள்