ஒரு பயணி உளூச் செய்து, தம் இரு காலுறைகளையும் அணிந்து, பின்னர் உளூவை முறித்துவிட்டால், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம்; உள்ளூரில் தங்கி இருப்பவர் ஒரு இரவும் ஒரு பகலும் (மட்டும்) காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
(இப்னுமாஜா: 556)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَبِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالَ: حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مَخْلَدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ «رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ، ثُمَّ أَحْدَثَ وُضُوءًا، أَنْ يَمْسَحَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-549.
Ibn-Majah-Shamila-556.
Ibn-Majah-Alamiah-549.
Ibn-Majah-JawamiulKalim-549.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45556-முஹாஜிர் பின் மக்லத் என்பவர் பற்றி அதிகமானோர் பாராட்டியுள்ளனர். வேறுசிலர் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.
விரிவாக பார்க்க: முஹாஜிர் பின் மக்லத்.
இவரைப் பற்றிய ஆய்வில் இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று சிலர் கருதுவதால் இவர் இடம்பெறும் செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص54):
66 – وَسَأَلْتُ مُحَمَّدًا فَقُلْتُ: أَيُّ الْحَدِيثِ عِنْدَكَ أَصَحُّ فِي التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ؟ قَالَ: حَدِيثُ صَفْوَانَ بْنِ عَسَّالٍ ، 67 – وَحَدِيثُ أَبِي بَكْرَةَ حَسَنٌ.
புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்.
3 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
…
மேலும் பார்க்க: முஸ்லிம்-465.
சமீப விமர்சனங்கள்