பாடம்:
முஹாஜிர் பெண்கள், மதீனாவில் உள்ள (அவர்களின் கணவனின்) வீட்டிற்கு வாரிசாக்கப்படுதல் பற்றி வந்துள்ளவை.
(நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கருகில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மனைவியும், சில முஹாஜிர் பெண்களும் இருந்தனர். அவர்கள், தங்களின் வீடுகள் இடநெருக்கடியாக இருப்பதையும், (கணவன் இறந்தப் பின்) வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறோம் என்றும் முறையிட்டனர். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஹாஜிர் பெண்களின் கணவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் வீட்டுக்கு முஹாஜிர் பெண்களே வாரிசாகவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இறந்த போது மதீனாவில் இருந்த அவரின் வீட்டிற்கு அவரின் மனைவி (ஸைனப் பின்த் அப்துல்லாஹ்-ரலி) வாரிசாக ஆனார்.
அறிவிப்பவர்: குல்ஸூம் பின்த் அல்கமா (ரஹ்)
(பைஹகீ-குப்ரா: 11876)بَابُ مَا جَاءَ فِي تَوْرِيثِ نِسَاءِ الْمُهَاجِرِينَ خِطَطَهُنَّ بِالْمَدِينَةِ
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ , أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ , أنبأ أَبُو دَاوُدَ , أنبأ عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ , ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ , ثنا الْأَعْمَشُ , عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ , عَنْ كُلْثُومٍ , عَنْ زَيْنَبَ
أَنَّهَا كَانَتْ تَفْلِي رَأْسَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ امْرَأَةُ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَنِسَاءٌ مِنَ الْمُهَاجِرَاتِ وَهُنَّ يَشْتَكِينَ مَنَازِلَهُنَّ أَنَّهَا تَضِيقُ عَلَيْهِنَّ وَيَخْرُجْنَ مِنْهَا، ” فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُوَرِّثَ دُورَ الْمُهَاجِرِينَ النِّسَاءَ ” فَمَاتَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ فَوَرِثَتْهُ امْرَأَتُهُ دَارًا بِالْمَدِينَةِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-11876.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-10979.
சமீப விமர்சனங்கள்