தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3080

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கருகில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மனைவியும், சில முஹாஜிர் பெண்களும் இருந்தனர். அவர்கள், தங்களின் வீடுகள் இடநெருக்கடியாக இருப்பதையும், (கணவன் இறந்த பின்) வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறோம் என்றும் முறையிட்டனர். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஹாஜிர் பெண்களின் கணவர்கள் இறந்துவிட்டால் வீட்டுக்கு முஹாஜிர் பெண்களே வாரிசாக வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இறந்த போது மதீனாவில் இருந்த அவரின் வீட்டிற்கு அவரின் மனைவி (ஸைனப் பின்த் அப்துல்லாஹ்-ரலி) வாரிசாக ஆக்கப்பட்டார்.

அறிவிப்பவர்: குல்ஸூம் பின்த் அல்கமா (ரஹ்)

(அபூதாவூத்: 3080)

حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ كُلْثُومٍ، عَنْ زَيْنَبَ،

أَنَّهَا كَانَتْ تَفْلِي رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ امْرَأَةُ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَنِسَاءٌ مِنَ الْمُهَاجِرَاتِ وَهُنَّ يَشْتَكِينَ مَنَازِلَهُنَّ أَنَّهَا تَضِيقُ عَلَيْهِنَّ، وَيُخْرَجْنَ مِنْهَا «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم أَنْ تُوَرَّثَ دُورَ الْمُهَاجِرِينَ النِّسَاءُ»، فَمَاتَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ فَوُرِّثَتْهُ امْرَأَتُهُ دَارًا بِالْمَدِينَةِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3080.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2679.




  • அப்துல்வாஹித் பின் ஸியாத் அவர்களிடமிருந்து அப்துல்வாஹித் பின் கியாஸ் அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியில் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மனைவி இருந்தார் என்று வந்துள்ளது.
  • அப்துல்வாஹித் பின் ஸியாத் அவர்களிடமிருந்து அஃப்பான் அவர்கள் அறிவிக்கும் செய்தியில் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன், உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவி இருந்தார் என்று வந்துள்ளது.

இருவரில் அஃப்பான் அவர்களே மிக பலமானவர் என்பதால் அவர் அறிவிக்கும் கருத்தே சரியானது.

1 . இந்தக் கருத்தில் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27049 , 27050 , அபூதாவூத்-3080 , அல்முஃஜமுல் கபீர்-146 , குப்ரா பைஹகீ-11876 ,

2 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-733 .

1 comment on Abu-Dawood-3080

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.