உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமிருந்து குல்ஸூம் பின்த் அல்கமா அல்குஸாயீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பு.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் பின்த் அப்துல்லாஹ் (ரலி) வந்து என்னிடம் பேச்சு கொடுத்தார். நானும் அவரைப் பார்த்து பேச ஆரம்பித்தேன். அப்போது நபி (ஸல்) பேன் பார்த்துக்கொண்டே பேசு! நீ அவரிடம் கண்ணால் பேசவில்லையே! என்று கூறினார்கள்.
அப்போது ஸைனப் பின்த் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தன்னுடைய வீடு இடநெருக்கடியாக இருப்பதை முறையிட்டார்கள். …அப்போது நபி (ஸல்) அவர்கள், உஸ்மான் பின் மள்வூன் அவர்களின் மனைவி அவரின் வீட்டுக்கு வரும் போது நெருக்கடியாக இருந்ததால் அவரின் தலையில் இடித்துவிட்டது என்று கூறினார்கள்…
பிறகு நபி (ஸல்) அவர்கள், மதீனாவில் கணவனின் வீட்டிலிருக்கும் முஹாஜிர் பெண்களுக்கு கணவர் இறந்தபின் அவரின் மனைவி அந்த வீட்டுக்கு வாரிசாவார் என்று கூறினார்கள். (எனவே இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இறந்தப்பின்) அவரின் சொத்தில் தனக்குரிய பங்கையும், மதீனாவில் இருந்த அவரின் வீட்டுக்கும் ஸைனப் (ரலி) வாரிசாக ஆனார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 733)كُلْثُومٌ الْخُزَاعِيُّ، عَنْ أُمِّ سَلَمَةَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا عَاصِمُ بْنُ عَلِيٍّ ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ كُلْثُومٍ الْخُزَاعِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ،
أَنَّهَا كَانَتْ تُفَلِّي رَأْسَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ عَبْدِ اللهِ بْنُ مَسْعُودٍ فَجَعَلَتْ تُكَلِّمُنِي وَأُكَلِّمُهَا وَرَفَعْتُ بَصَرِي إِلَيْهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقْبِلِي عَلَى فِلَايَتِكِ، فَإِنَّكِ لَسْتِ تُكَلِّمِينَهَا بِعَيْنَيْكِ» ، قَالَتْ زَيْنَبُ: فَجَعَلْتُ أَشْكُو ضِيقَ الْمَسْكَنِ، فَقَالَ: هَذَا كَمَا صَنَعَتِ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، لَمْ يَسَعُهَا مَا نَزَلَتْ حَتَّى نَزَلَ عَلَى رَأْسِهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَاكَ مَنِ اخْتَطَّ خُطَّةً بِالْمَدِينَةِ مِنَ الْمُهَاجِرَاتِ، فَلَهَا خِطَّتُهَا، فَوَرِثَتْ نَصِيبَهَا مِنْ دَارِ عَبْدِ اللهِ، وَأَحْرَزَتْ دَارَهَا بِالْمَدِينَةِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-733.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19233.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34365-கைஸ் பின் ரபீஃ நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், இவர் வயதான காலத்தில் நினைவாற்றலில் பாதிப்படைந்துவிட்டார்; இவரின் செய்திகளில் வேறுசிலரின் செய்திகளை இவரின் மகன் கலந்துவிட்டார்; அது தெரியாமல் இவர் அவைகளை அறிவித்தார் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/447, தக்ரீபுத் தஹ்தீப்-1/804)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-733 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3080 .
சமீப விமர்சனங்கள்