தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-13475

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

13475. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாமென்று கூறினார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முன்புபோன்று கூறிய போதும் தடுத்தார்கள்.

மூன்றாவது முறையும் அவர் வந்து முன்புபோன்று கூறிய போது, அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும், அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மற்ற சமுதாயத்திற்கு முன் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

மஃகில் பின் யசார் (ரலி)

معقل بن يسار المزني

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: மஃகில் பின் யஸார் பின் அப்துல்லாஹ் பின் மஃபர் பின் ஹர்ராக் பின் லாயீ பின் கஅப் பின் அப்த் பின் ஸவ்ர் பின் ஹத்மா பின் லாதிம் பின் உஸ்மான் பின் அம்ர் பின் அட் பின் தாபிகா

தந்தை பெயர்: யஸார் பின் அப்துல்லாஹ் பின் மஃபர்

வம்சம்: அல்மஸ்னீ

புனைப்பெயர்: அபூ அலீ, அபூ யஸார், அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், மதீனா, பஸரா

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

மஃகில் பின் யஸார் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் ரிழ்வான் உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். இவர் பஸராவில் வாழ்ந்து அங்கேயே ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), நுஃமான் பின் மக்ரன் அல்மஸ்னீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இம்ரான் பின் ஹுஸைன், முஆவியா பின் குர்ரா பின் இயாஸ், அல்கமா பின் அப்துல்லாஹ், அல்கம் பின் அப்துல்லாஹ் அல்அஃரஜ், அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ, ஹஸன் அல் பஸரீ, நாஃபிஃ பின் அபூ நாஃபிஃ, அபுல் மலீஹ் பின் உஸாமா, முஸ்லிம் பின் முக்ராக் அல்அப்தீ, இயாத் அபூ காலித் அல்பஜ்லீ

வேறு பெயர்கள்: அபூ யஸார், அபூ அலீ, அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (3120) · Should verify


أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنبأ أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْمَحْبُوبِيُّ بِمَرْوَ، ثنا سَعِيدُ بْنُ مَسْعُودٍ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، ثنا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، ثنا مَنْصُورُ بْنُ زَاذَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَمَنْصِبٍ وَمَالٍ، إِلَّا أَنَّهَا لَا تَلِدُ أَفَأَتَزَوَّجُ بِهَا؟ فَنَهَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: ” تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-13475.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-12477.



மேலும் பார்க்க : அபூதாவூத்-2050 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.