ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.
(பைஹகீ-குப்ரா: 13499)وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، ثنا عَلِيُّ بْنُ سَعِيدٍ، ثنا طَالُوتُ بْنُ عَبَّادٍ، ثنا مُطِيعُ بْنُ مَيْمُونٍ أَبُو سَعِيدٍ قَالَ: حَدَّثَتْنَا صَفِيَّةُ بِنْتُ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ:
جَاءَتِ امْرَأَةٌ وَرَاءَ السِّتْرِ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ وَقَالَ: ” مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ ” قَالَتْ: بَلْ يَدُ امْرَأَةٍ قَالَ: ” لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظَافِرَكِ بِالْحِنَّاءِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-13499.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-12501.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஸஃபிய்யா பின்த் இஸ்மா யாரென அறியப்படாதவர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1360)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .
சமீப விமர்சனங்கள்