தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-18527

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஷஹீத்) உயிர்த்தியாகியின் பரிந்துரை ஏற்கப்படும்.

நிம்ரான் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (தந்தையை இழந்த) அனாதைகளாக உம்முத்தர்தா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “ஒரு நற்செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்”. (மறுமை நாளில் ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (எனது கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்

இதில் இடம்பெறும் வலீத் பின் ரபாஹ் அத்திமாரீ என்ற பெயர் ரபாஹ் பின் வலீத் என்பதே சரியாகும் என்று அபூதாவூத் இமாம் கூறியுள்ளார்.

(பைஹகீ-குப்ரா: 18527)

بَابُ الشَّهِيدِ يُشَفَّعُ

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا أَحْمَدُ بْنُ صَالِحٍ، ثنا يَحْيَى بْنُ حَسَّانَ، ثنا الْوَلِيدُ بْنُ رَبَاحٍ الذِّمَارِيُّ، قَالَ: حَدَّثَنِي عَمِّي نِمْرَانُ بْنُ عُتْبَةَ الذِّمَارِيُّ قَالَ:

دَخَلْنَا عَلَى أُمِّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامٌ فَقَالَتْ: أَبْشِرُوا فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ

قَالَ أَبُو دَاوُدَ: صَوَابُهُ رَبَاحُ بْنُ الْوَلِيدِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-18527.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17044.




மேலும் பார்க்க: அபூதாவூத்-2522 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.