தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-3689

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவுத்தொழுகை) தொழ நின்றேன். (பிறகு) அவர்கள் நின்ற நிலையில் திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான ஸூரத்துல் பகராவை ஓதினார்கள். அதில் அல்லாஹ்வின் அருள் சம்பந்தமான வசனங்கள் வரும் போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் அருளைக் கேட்டார்கள். அதில் அல்லாஹ்வின் தண்டனை சம்பந்தமான வசனங்கள் வரும்போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாதுகாப்பு கேட்டார்கள். பின்பு அவர்கள் நிலையில் நின்ற அளவு ருகூஃவில் (குனிந்து) இருந்தார்கள். மேலும் அந்த ருகூவில், “ஸுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல்அளமஹ்” (பொருள்: அடக்கி ஆளுதலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்) என்று கூறினார்கள்.

பிறகு ஸஜ்தாவில், நிலையில் நின்ற அளவு இருந்தார்கள். ஸஜ்தாவிலும் அந்த பிரார்த்தனையை கூறினார்கள். பின்பு நிலைக்கு எழுந்து 3 வது அத்தியாயமான ஸூரத்து ஆல இம்ரானை ஓதினார்கள். பிறகு அடுத்தடுத்த அத்தியாயங்களை ஓதினார்கள்.

(பைஹகீ-குப்ரா: 3689)

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا أَحْمَدُ بْنُ صَالِحٍ، ثنا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ:

قُمْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَقَامَ فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ لَا يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ قَالَ: ثُمَّ رَكَعَ بِقَدْرِ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ: ” سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ ” ثُمَّ سَجَدَ بِقَدْرِ قِيَامِهِ ثُمَّ قَالَ فِي سُجُودِهِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَامَ فَقَرَأَ بِآلِ عِمْرَانَ، ثُمَّ قَرَأَ سُورَةً سُورَةً


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3689.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-3395.




மேலும் பார்க்க: நஸாயீ-1049 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.