பாடம்:
ருகூவில் கூற வேண்டிய மற்றொரு துதிச்சொல் (பிரார்த்தனை).
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவுத்தொழுகை) தொழ நின்றேன். (பிறகு) அவர்கள் ருகூவில் (குனிந்து) ஸூரத்துல் பகரா அத்தியாயத்தை ஓதும் அளவிற்கு அதில் இருந்தார்கள். மேலும் அந்த ருகூவில், “ஸுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல்அளமஹ்” என்று கூறினார்கள்.
(பொருள்: அடக்கி ஆளுதலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்)
(நஸாயி: 1049)نَوْعٌ آخَرُ مِنَ الذِّكْرِ فِي الرُّكُوعِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ يَعْنِي النَّسَائِيَّ، قَالَ: حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ يَعْنِي ابْنَ صَالِحٍ، عَنْ ابْنِ قَيْسٍ الْكِنْدِيِّ وَهُوَ عَمْرُو بْنُ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ عَاصِمَ بْنَ حُمَيْدٍ، قَالَ: سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ يَقُولُ:
قُمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَلَمَّا رَكَعَ مَكَثَ قَدْرَ سُورَةِ الْبَقَرَةِ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1049.
Nasaayi-Shamila-1049.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1038.
- இந்த செய்தியை நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள் ஸஹீஹ் என்று கூறியிருப்பதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மறுத்து ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். காரணம் இதில் இடம்பெறும் முஆவியா பின் ஸாலிஹ் முஸ்லிமின் அறிவிப்பாளர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர்-நம்பகமானவர் என்ற தரத்தில் உள்ளவர். மேலும் இதை இவர் தனித்து அறிவிப்பதால் ஹஸன் என்றே கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: நதாஇஜுல் அஃப்கார்-2/75)
2 . இந்தக் கருத்தில் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-23980 , அபூதாவூத்-873 , முஸ்னத் பஸ்ஸார்-2750 , 2751 , குப்ரா நஸாயீ-722 , நஸாயீ-1049 , அல்முஃஜமுல் கபீர்-113-2 , குப்ரா பைஹகீ-3689 ,
…
இது ஆதாரபூர்வமான செய்தி ஆகும்.. விமர்சனம் இல்லை
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. ஆய்வில் ஹஸன் தரம் என்றே தெரிகிறது.