தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6297

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெருநாட்களிலும் மக்கள் ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது வேதக்காரர்களான (யஹூதி நஸாராக்களின்) கலாச்சாரமாகும் என்று கூறி அவ்வாறு கூறுவதை வெறுத்தார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 6297)

أَخْبَرَنَاهُ أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ بِبَغْدَادَ , أنبأ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّزَّازُ , ثنا مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ بْنِ حَمَّادٍ، ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثنا عَبْدُ الْخَالِقِ بْنُ زَيْدِ بْنِ وَاقِدٍ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِ النَّاسِ فِي الْعِيدَيْنِ: ” تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ , قَالَ: ” ذَلِكَ فِعْلُ أَهْلِ الْكِتَابَيْنِ وَكَرِهَهُ

عَبْدُ الْخَالِقِ بْنُ زَيْدٍ مُنْكَرُ الْحَدِيثِ , قَالَهُ الْبُخَارِيُّ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6297.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5817.




إسناد شديد الضعف فيه عبد الخالق بن زيد الدمشقي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21247-அப்துல் காலிக் பின் ஸைத் அத்திமிஷ்கீ பற்றி இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் ”முன்கருல் ஹதீஸ்” (நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிப்பவர்) என்று விமர்சித்துள்ளார். மேலும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான் 5/78)

எனவே இது மிக பலவீனமான செய்தியாகும்.

மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-6294 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.