தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6572

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணம் ஏற்படுவதை வெறுக்க வேண்டுமா? என நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், என்ன காரணத்திற்காக அதை வெறுக்க வேண்டும்?.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இதைப்பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள்.

(பைஹகீ-குப்ரா: 6572)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَحْمَدُ بْنُ الْحَسَنِ الْقَاضِي قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْوَلِيدِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ قَالَ:

سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ مَوْتِ الْفُجَاءَةِ، أَيُكْرَهُ؟. قَالَتْ: لِأِيِّ شَيْءٍ يُكْرَهُ؟ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: ” رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذُ أَسَفٍ لِلْفَاجِرِ

وَرَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عُبَيْدِ اللهِ مَوْقُوفًا عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6572.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-6070.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உபைதுல்லாஹ் பின் வலீத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-25042 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.