தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6724

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், அரஃபா நாளில் ஒரு அராக் மரத்தின் கீழ் இருந்துக் கொண்டு தனது தலையிலும் முகத்திலும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! பெரும்பாவங்கள் எவை? என்று தெரிவியுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கவர்கள், (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
2 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவது,
3 . நம்பிக்கைக் கொண்ட உயிரை நியாயமின்றி கொலைசெய்வது,
4 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பது,
6 . முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை தருவது,
7 . உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை கெடுப்பது ஆகியவைகளாகும்.

(பைஹகீ-குப்ரா: 6724)

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ، ثنا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَرُّوذِيُّ، ثنا أَيُّوبُ، عَنْ طَيْسَلَةَ بْنِ عَلِيٍّ قَالَ:

سَأَلْتُ ابْنَ عُمَرَ وَهُوَ فِي أَصْلِ الْأَرَاكِ يَوْمَ عَرَفَةَ، وَهُوَ يَنْضَحُ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَوَجْهِهِ، فَقُلْتُ لَهُ: يَرْحَمُكَ اللهُ، حَدِّثْنِي عَنِ الْكَبَائِرِ، فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللهِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ ” فَقُلْتُ: أَقَتْلُ الدَّمِ؟ قَالَ: ” نَعَمْ، وَرَغْمًا، وَقَتْلُ النَّفْسِ الْمُؤْمِنَةِ، وَالْفِرَارُ يَوْمَ الزَّحْفِ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ، وَإِلْحَادٌّ بِالْبَيْتِ الْحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءً وَأَمْوَاتًا “


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6724.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-6213.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8696-அய்யூப் பின் உத்பா என்பவர் பற்றி சிலர் இவர் உண்மையாளர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும்; வேறு சிலர் அதிகம் தவறிழைப்பவர் என்றும்; வேறு சிலர் விடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இவர் பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் பஃக்தாதில் இருக்கும் போது மனனத்திலிருந்து அறிவித்தார். அதனால் அதிகம் தவறாக அறிவித்தார். யமாமாவில் இருக்கும் போது நூலிலிருந்து அறிவித்தார். இவர் யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிப்பது சரியானது என்று ஸுலைமான் பின் தாவூத் கூறியதாக அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.
  • இவ்வாறே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களும் கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து ஈராக் வாசிகள் அறிவிப்பது பலவீனமானவை என்றும் அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
    இறப்பு ஹிஜ்ரி 264
    வயது: 64
    கூறியுள்ளார்…

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/253, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/10, தஹ்தீபுத் தஹ்தீப்-1/206, தக்ரீபுத் தஹ்தீப்-1/160)

அதிகமானோர் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர். எனவே இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தே ஏற்கவேண்டும். இந்தச் செய்தியை இவர் தவறாக அறிவித்துள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்..


மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-8 .