தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-10619

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வார்த்தைகளில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த வார்த்தை ஒரு அடியார் “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, வ தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக” என்று கூறுவதாகும்.

(பொருள்: இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை)

வார்த்தைகளில் அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பான வார்த்தை ஒருவர் இன்னொருவரிடம், “நீ அல்லாஹ்வை பயந்துக் கொள்! என்று கூற அவர், “நீ உன்னை பார்த்துக் கொள்! என்று கூறுவதாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

 

(குப்ரா-நஸாயி: 10619)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ أَحَبَّ الْكَلَامِ إِلَى اللهِ أَنْ يَقُولَ الْعَبْدُ: سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ، وَإِنَّ أَبْغَضَ الْكَلَامِ إِلَى اللهِ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ: اتَّقِ اللهَ فَيَقُولُ: عَلَيْكَ نَفْسَكَ


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10619.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10205.




  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது எனக் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-2598)

இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2403 , .. குப்ரா நஸாயீ-10619 , 10620 , 10621 , 10622 , அல்முஃஜமுல் கபீர்-8587 , ஷுஅபுல் ஈமான்-621 , 6771 , 7896 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.