ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)
(குப்ரா-நஸாயி: 10648)أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ جُبَيْرٍ وَكَانَ شَرِيكَ مَسْرُوقٍ عَلَى السِّلْسِلَةِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
«لَوْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ لَكَانَ أَكْثَرَ دُعَائِي فِيهَا أَنْ أَسْأَلَ اللهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10648.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10230.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8854-மஸ்ரூக் அவர்களின் கூட்டாளி-அப்துல்லாஹ் பின் ஜுபைர் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. பஹ்ஷல் என்ற ஹதீஸ்கலை அறிஞர் மஸ்ரூக் அவர்களின் கூட்டாளி என்று அப்துல்லாஹ் பின் ஹுனைன் என்ற பெயரை கூறியுள்ளார். (நூல்: தாரீகு வாஸித்-38)
- கதீப் பக்தாதீ அவர்களின் தல்கீஸுல் முதஷாபிஹ் என்ற நூலில் மஸ்ரூக் அவர்களின் கூட்டாளி-அப்துல்லாஹ் பின் ஜுபைர் என்றே இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் ஹுனைன் என்று இருவரை கூறுகிறார். ஒருவர் இப்னு அப்பாஸ் அவர்களின் அடிமை. மற்றொருவர் அப்துல்லாஹ் பின் ஹுனைன் அல்கூஃபீ. இந்த இருவரிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹுமைத் அத்தவீல் இடம்பெறவில்லை.
(நூல்:தல்கீஸுல் முதஷாபிஹ் ஃபிர்ரஸ்மி-1/412)
- எனவே மேற்கண்ட இருவரைப் பற்றிய நம்பகத்தன்மை தெரியவில்லை என்பதால் இவர்கள் அறியப்படாதவர்கள் என்ற அடிப்படையில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இது மவ்கூஃபான செய்தி.
மேலும் பார்க்க : திர்மிதீ-3513 .
சமீப விமர்சனங்கள்