தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-1486

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஸுலைமான் பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஹம்மது பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது அவருக்கு அது கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

அப்போது அவர், “லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரியும்; அபூஸுஃப்யான் அவர்களின் மகளுமான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறினார்.

(நஸாயி: 1486)

أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ مُوسَى، يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ:

لَمَّا نَزَلَ بِهِ الْمَوْتُ أَخَذَهُ أَمْرٌ شَدِيدٌ فَقَالَ: حَدَّثَتْنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا، حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-1486.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-1463.




  • மேற்கண்ட இந்தச் செய்தியை ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஆஸிம், அபூஆமிர் ஆகியோர் ஸயீத் பின் அப்துல்அஸீஸ் —> ஸுலைமான் பின் மூஸா —> முஹம்மது பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். இதன் அறிவிப்பாளர்தொடர் தவறாகும்.
  • காரணம் ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மர்வான் பின் முஹம்மத், நுஃமான் பின் முன்திர் ஆகியோர் ஸயீத் பின் அப்துல்அஸீஸ் —> ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
  • இவர்கள் இருவரும், இவர்களின் ஆசிரியரான ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஷாம்வாசிகள் ஆவர். ஆனால் அபூஆஸிம், ஆபூஆமிர் ஆகியோர் பலமானவர்கள்தான் என்றாலும் இவர்கள் பஸராவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • ஒருவரின் செய்தியை அவரின் ஊர்வாசிகளே நன்கு அறிந்தவர்கள் என்பதாலும், அதிகமானோர் அன்பஸா பின் அபூஸுஃப்யான் அவர்களை கூறியே இந்தச் செய்தியை அறிவித்துள்ளனர் என்பதாலும் மர்வான் பின் முஹம்மத் அவர்களின் அறிவிப்பே மஹ்ஃபூல்-முன்னுரிமைபெற்ற செய்தியாகும்.

அபூஆஸிம் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி ஷாத் ஆகும்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-5252, 25/284)


இதில் இடம்பெறும் முஹம்மது பின் அபூஸுஃப்யான் என்பவர் முஹம்மது பின் அபூஸுஃப்யான் பின் அலாஉ பின் ஜாரியா (*ஹாரிஸா) அஸ்ஸகஃபீ என்பவராவார் என்று அபுல்காஸிம் அவர்களின் நூலில் உள்ளதாக மிஸ்ஸீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-15866, 11/314)

ஆனால், இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் சகோதரர் அல்ல. மேற்கண்ட செய்தியில் எனது சகோதரி உம்மு ஹபீபா (ரலி) அறிவித்தார் என்று இடம்பெற்றுள்ளது. எனவே இவர் முஹம்மது பின் அபூஸுஃப்யான்-ஸக்ர் பின் ஹர்ப் என்பவர் ஆவார். 

ஆனாலும் மேற்கண்ட செய்தியை அபூஸுஃப்யான் (ரலி) அவர்களின் மகன்களில் அன்பஸா பின் அபூஸுஃப்யான் அவர்கள் வழியாகவே அதிகமானோர் அறிவித்துள்ளனர். எனவே மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் தவறாகும்.


தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இதில் முஹம்மது பின் அபூஸுஃப்யான் என்று கூறியிருப்பது தவறு என்றும் அன்பஸா பின் அபூஸுஃப்யான் என்பதே சரியானது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்காஷிஃப்-4877, 2/175)

மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.