தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-3318

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூ ரபாஹ் (ரஹ்)

(நஸாயி: 3318)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: أَخْبَرَنَا حُسَيْنٌ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3318.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3237.




  • இது பலவீனமான மவ்கூஃபான செய்தியாகும்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28478-அதாஉ பின் அபூ ரபாஹ் (ரஹ்) அவர்கள், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது நேரடியாக கேட்டதாக அறிவித்தாலே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் கூறியதாக அஸ்ரம் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/101) 

وروى الأثرم عن أحمد ما يدل على أنه كان يدلس ، فقال في قصة طويلة : ورواية عطاء عن عائشة لا يحتج بها إلا أن يقول : سمعت

تهذيب التهذيب: (3 / 101)

   . மேலும் பார்க்க : திர்மிதீ-807

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.