அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.
தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(நஸாயி: 3578)أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجِنَايَةِ أَبِيهِ وَلَا بِجِنَايَةِ أَخِيهِ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3578.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3482.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)
இந்த செய்தியின் முதல் பகுதி சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. (பார்க்க: புகாரி-6166)
- இதன் அறிவிப்பாளர் தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் அஃமஷ் வழியாக அறிவிக்கும் மற்ற பலமானவர்களான அபூமுஆவியா, ஷுஃபா, ஜரீர் போன்ற பலர் இந்த செய்தியை முர்ஸலாக-நபித்தோழரை விட்டு அறிவித்துள்ளனர் என்பதால் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-5/241)
மேலும் பார்க்க: புகாரி-6166 .
…
சமீப விமர்சனங்கள்