தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-5839

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

கைஸ் அல்மதனீ கூறுகிறார்:

ஒருவர் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் அமைதியாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதில் தவ்ஸீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்” என்றார்கள்.

(குப்ரா-நஸாயி: 5839)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ،

أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَجُلًا جَاءَ زَيْدَ بْنَ ثَابِتٍ، فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، فَقَالَ لَهُ زَيْدٌ: عَلَيْكَ أَبَا هُرَيْرَةَ، فَإِنِّي بَيْنَمَا أنا وَأَبُو هُرَيْرَةَ، وَفُلَانٌ فِي الْمَسْجِدِ ذَاتَ يَوْمٍ نَدْعُو اللهَ، وَنَذْكُرُ رَبَّنَا خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَسَكَتْنَا فَقَالَ: «عُودُوا لِلَّذِي كُنْتُمْ فِيهِ» قَالَ زَيْدٌ: فَدَعَوْتُ أَنَا وَصَاحِبَيَّ قَبْلَ أَبِي هُرَيْرَةَ، وَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَمِّنُ عَلَى دُعَائِنَا، ثُمَّ دَعَا أَبُو هُرَيْرَةَ، فَقَالَ: اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِثْلَ مَا سَأَلَكَ صَاحِبَايَ هَذَانِ، وَأَسْأَلُكَ عِلْمًا لَا يُنْسَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمِينَ»، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ وَنَحْنُ نَسْأَلُ اللهَ عِلْمًا لَا يُنْسَى، فَقَالَ: «سَبَقَكُمْ بِهَا الْغُلَامُ الدَّوْسِيُّ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-5839.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-5667.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் இப்ராஹீம் பின் ஸத்ரான்

3 . ஃபள்ல் பின் அலாஃ

4 . இஸ்மாயீல் பின் உமைய்யா

5 . முஹம்மத் பின் கைஸ்

6 . கைஸ் அல்மதனீ

7 . ஸைத் பின் ஸாபித் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34340-கைஸ் அல்மதனீ என்பவரிடமிருந்து அவரின் மகன் ராவீ-42180-முஹம்மத் பின் கைஸ் அல்காஸ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். இவரைப் பற்றி எந்த அறிஞரின் நற்சான்றிதலும் இல்லை.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/455, தக்ரீபுத் தஹ்தீப்-1/806)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-5839, அல்முஃஜமுல் அவ்ஸத்-1228, ஹாகிம்-6158, தாரீகு திமிஷ்க்-, தஹ்தீபுல் கமால்-,


தாரீகு திமிஷ்க்-,

تاريخ دمشق لابن عساكر (67/ 334):
اخبرناه أبو المعالي محمد بن إسماعيل بن محمد الفارسي أنا أبو بكر أحمد بن الحسين أنا علي بن أحمد بن عبدان أنا أحمد بن عبيد الصفار ثنا إسماعيل بن الفضل نا إبراهيم بن محمد بن عرعرة نا فضل بن العلاء نا إسماعيل بن أمية عن محمد بن قيس يعني ابن مخرمة عن أبيه أنه أخبره أن رجلا رجاء إلى زيد بن ثابت فسأله عن شئ ” ح قال وأنا علي بن محمد المقرئ الإسفرايني أنا الحسن بن محمد بن إسحاق نا يوسف بن يعقوب نا محمد بن أبي بكر نا الفضل بن العلاء نا إسماعيل بن أمية عن محمد بن قيس أنه أخبره أن رجلا أتى زيد بن ثابت فسأله عن شئ فقال عليك بأبي هريرة فإني بينما أنا أبو هريرة وفلان في المسجد خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن ندعو الله ونذكر ربنا فجلس إلينا فسكتنا فقال عودوا للذي كنتم فيه قال فدعوت أنا وصاحبي قبل أبي هريرة فجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ثم دعا أبو هريرة فقال اللهم إني أسألك ما سأل صاحباي هذان وأسألك علما ولا ينسي فقال النبي صلى الله عليه وسلم آمين فقلنا يا رسول الله ونحن نسأل الله علما لا ينسي فقال سبقكما الغلام الدوسي


தஹ்தீபுல் கமால்-,

تهذيب الكمال في أسماء الرجال (24/ 94)
أخبرنا به أبو الحسن بْن البخاري، قال: أَنْبَأَنَا أَبُو جَعْفَرٍ الصَّيْدَلانِيُّ، قال: أَخْبَرَنَا أَبُو عَلِيّ الحداد، قال: أَخْبَرَنَا أبو نعيم الحافظ، قال: حَدَّثَنَا سُلَيْمان بْنُ أَحْمَدَ الطَّبَرَانِيُّ، قال: حَدَّثَنَا أَحْمَد بْن مُحَمَّد بْن الجهم السمري، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَدْرَانَ، قال: حَدَّثَنَا الْفَضْل بْن الْعَلاء، عَنْ إِسْمَاعِيل بْن أمية، عَنْ مُحَمَّد بْن قَيْس، عَن أَبِيهِ أن رجلا جاء زَيْد بْن ثَابِت، فسأله عَنْ شيء، فَقَالَ له زَيْد: عليك بأبي هُرَيْرة بينما أنا وأَبُو هُرَيْرة وفلان ذات يَوْم في المسجد ندعو ونذكر ربنا إذ خرج علينا رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسَلَّمَ حَتَّى جلس إلينا فسكتنا، فَقَالَ: عودوا للذي كنتم فيه، قال زَيْد: فدعوت أنا أنا وصاحبي قبل أَبِي هُرَيْرة، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يؤمن على دعائنا ثُمَّ دعا أَبُو هُرَيْرة، فَقَالَ أَبُو هُرَيْرة: اللهم إِنِّي أسألك مثل صاحبي وأسألك علما لا ينسى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: آمين فقلنا: يَا رَسُول اللَّهِ نحن نسأل الله علما لا ينسى. فَقَالَ رَسُول اللَّهِ صلى الله عليه وسلم: “سبقكما بها الغلام الدوسي.
قال الطَّبَرَانِيّ: لم يروه عَنْ إِسْمَاعِيل بْن أمية إِلا الْفَضْل بْن الْعَلاء، ولا يروى عن زَيْد بْن ثَابِت إِلا بهذا الإسناد. رواه عن محمد بن إبراهيم بن صدران، فوافقناه فيه بعلو.


இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-2350,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.