நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவர் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ, அல்லது சிறு கற்களோ இருந்தன.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, அவை
“ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிஸ்ஸமாஇ,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிர்அர்ளி,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா பைன தாலிக,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா ஹுவ காலிகுன்”
இதேபோன்று (ஸுப்ஹானல்லாஹி என்ற இடத்தில்)
அல்லாஹு அக்பர் என்பதையும்;
அல்ஹம்து லில்லாஹ் என்பதையும்;
லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ் என்பதையும் (சேர்த்துக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி)
(குப்ரா-நஸாயி: 9922)عَنْ أَبِي الطَّاهِرِ أَحْمَدَ بْنِ عَمْرِو بْنِ السَّرْحِ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا سَعْدٍ،
أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدِهَا نَوَى أَوْ حَصَى تُسَبِّحُ بِهِ (فَقَالَ: أَلاَ أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا، أَوْ أَفْضَلُ؟ سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، وَالْحَمْدُ للهِ مِثْلَ ذَلِكَ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ مِثْلَ ذَلِكَ)
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9922.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்