தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-13270

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

மேலும் உயர்ந்தோன் அல்லாஹ், ஆண்கள் மீது அறப்போர் செய்வதையும், பெண்கள் மீது ரோஷம் கொள்வதையும் எழுதிவிட்டான். எனவே பொறுமைகொள்ளும் பெண்களுக்கு அறப்போர் செய்தவரின் கூலி போன்றது கிடைக்கும் என்று அபூஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர்: லைஸ் பின் அபூஸுலைம்

அபூஉபைதா அவர்கள், இதை நபியின் கூற்றாக கூறினாரா? அல்லது இல்லையா? என்று எனக்குத் தெரியாது என்று லைஸ் பின் அபூஸுலைம் கூறினார்.

(musannaf-abdur-razzaq-13270: 13270)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ التَّيْمِيِّ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: لَا أَدْرِي أَرَفَعَهُ أَمْ لَا. قَالَ:

«مَا أَحَلَّ اللَّهُ حَلَالًا أَكَرْهَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، وَإِنَّ اللَّهَ تَعَالَى كَتَبَ الْجِهَادَ عَلَى الرِّجَالِ، وَالْغَيْرَةَ عَلَى النِّسَاءِ، فَمَنْ صَبَرَ مِنْهُنَّ كَانَ لَهَا مِثْلُ أَجْرِ الْمُجَاهِدِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-13270.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-12902.




  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

3 . இந்தக் கருத்தில் அபூஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-13270 ,

மேலும் பார்க்க: இப்னு மாஜா-2018 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.