தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-3057

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தொழுகையில் இருப்பில் இருப்பவர் தன்னுடைய இடது கையை (பின்புறமாக ஊன்றி) வைக்கும் விசயத்தில் இது எவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டதோ அவர்களுடைய இருப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-3057: 3057)

عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ، يُخْبِرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّهُ كَانَ يَقُولُ فِي وَضْعِ الرَّجُلِ شِمَالَهُ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ: «هِيَ قَعْدَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-3057.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-2973.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-32156-அம்ர் பின் அஷ்ஷரீத் (அபுல்வலீத்-ரஹ்) அவர்கள் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள் இவர் தாபிஈ; பலமானவர்; ஹிஜாஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/277)

  • எனவே இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இது முர்ஸலான செய்தி. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-6347 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.