பாடம்:
வெறுப்பிற்குரிய உட்காரும் முறை.
அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்கள், “அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று (என்னிடம்) கூறினார்கள்.
(அபூதாவூத்: 4848)بَابٌ فِي الْجِلْسَةِ الْمَكْرُوهَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ
مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِيَ الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي، فَقَالَ: «أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ؟»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4848.
Abu-Dawood-Shamila-4848.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4210.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் அவர்கள், நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் ஆவார். (அதாவது தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார்)
- இது போல் தத்லீஸ் செய்யும் அறிவிப்பாளர்கள் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று அறிவிக்காமல் سمعت இவரிடம் நான் கேட்டேன் என்றோ حدثني என்னிடம் இவர் சொன்னார் என்றோ நேரில் கேட்டதைத் தெளிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் தான் அது ஏற்கப்படும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும்.
இப்னு ஜுரைஜ் என்பார் தத்லீஸ் செய்யக் கூடியவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
1 . இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறுகிறார் :
இன்னார் கூறினார், இன்னார் கூறினார் என்றோ எனக்கு அறிவிக்கப்பட்டது என்றோ இப்னு ஜுரைஜ் அறிவித்தால் நிராகரிக்கத்தக்க செய்திகளைக் கொண்டுவருவார். (அக்பரனீ) இன்னார் எனக்கு அறிவித்தார் என்றோ (ஸமிஃத்து) நான் செவியேற்றேன் என்றோ கூறினால் அதுதான் அவர் (செய்திகளில்) உனக்கு போதுமானதாகும்.
2 . இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறுகிறார்:
இப்னு ஜுரைஜ் தத்லீஸாக அறிவிப்பவற்றை விட்டும் தூர விலகி விடுங்கள். ஏனெனில் அவர் மிக மோசமாகத் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் ஆவார். அவர் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களிமிடருந்து தாம் செவியேற்றவற்றில் தான் தத்லீஸ் செய்வார்.
3 . இவர் தத்லீஸ் செய்பவராக இருந்தார் என இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/616)
- மேற்கண்ட செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் அவர்கள், இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளையும் கூறவில்லை என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-19454 , அபூதாவூத்-4848 , இப்னு ஹிப்பான்-5674 , அல்முஃஜமுல் கபீர்-7242 , 7243 , ஹாகிம்-7703 , குப்ரா பைஹகீ-5920 , அல்ஆதாப் லில்பைஹகீ-256 ,
இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?
1 . முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3057 அறிவிப்பில், இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யவில்லை. ஆனால் அது முர்ஸலான செய்தி. ஒரு வாதத்திற்கு அந்த செய்தியை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் அந்த செய்தியில் தொழுகையின் இருப்பில் கைகளை ஊன்றி வைப்பது கூடாது என்றுதான் வந்துள்ளது. எனவே தொழுகை அல்லாத நிலைகளில் அவ்வாறு ஊன்றி இருப்பதைத் தவறு என்று கூறமுடியாது.
2 . தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இடது கையைப் பின்புறமாக ஊன்றி இருப்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று மற்ற சரியான ஹதீஸ்களில் வந்துள்ளது.
(பார்க்க: அஹ்மத்-6347 , ஹாகிம்-1007 )
சமீப விமர்சனங்கள்