தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-7906

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலி போன்றே நோன்பு திறக்கச் செய்தவருக்கும் கூலி கிடைக்கும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் (ரஹ்)

(musannaf-abdur-razzaq-7906: 7906)

عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ صَالِحٍ، مَوْلَى التَّوْأَمَةِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ:

«مَنْ فَطَّرَ صَائِمًا أَطْعَمَهُ وَسَقَاهُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7906.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7694.




  • இது பலவீனமான மவ்கூஃபான செய்தியாகும்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்பவர். ஸாலிஹ் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை. உகைலி இமாம் அவர்கள் இப்னு ஜுரைஜுக்கும், ஸாலிஹ் அவர்களுக்கும் இடையில் விடுப்பட்டவர் இப்ராஹீம் பின் முஹம்மது அபூயஹ்யா என்று குறிப்பிட்டுள்ளார். இவர் மிக பலவீனமானவர். எனவே விடுப்பட்டவரும் பலவீனமாவர் என்பதாலும், இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்துல்லதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-807 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.